செய்திகள் :

திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபட்டார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டாா். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். அவரது செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டினர்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை(ஜன.11) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அரசு தயாரித்துத் தரும் உரையை வாசிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அரசியல் உள்நோக்கத்தோடு அவமதிப்பதும் ஆளுநருக்கு இழுக்கு. திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபடுகிறார். என்று ஆளுநர் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிகிறது. மேலும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

விடியல் அரசு

விடியல் பயண திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்றவற்றை சுட்டிக் காட்டி இவற்றை எல்லாம் அனுபவிக்கும் மக்கள் தான் விடியல் அரசின் சாட்சி. அவர்களுக்காகத் தான் விடியல் அரசே தவிர இருளில் இருக்கும் எதிர்க்கட்சிகளுகாக அல்ல என்றார்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் சட்டம்- ஒழுங்கு பிரச்னை

சட்டம்-ஒழுங்கு மாநிலத்தில் சீராக இருப்பதாகவும், 3 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், இன்னும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் கருணை இருந்தாலும் அதற்கான நிதி இல்லை என்று மாநில நிதி நிலைமை குறித்து பேசினரா.

அதிமுகவினர் கருப்புச்சட்டை

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை, புதிய கல்விக் கொள்கை, யுஜிசி விதிகள் திருத்தத்தால் கல்வியை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து, சட்டப்பேரவையின் மாண்பை சிதைத்த ஆளுநரை எதிர்த்து கருப்புச் சட்டை போராட்டம் நடத்தியிருந்தால் பாராட்டி, வரவேற்றிருப்பேன், அதைவிடுத்து இவர்கள் கருப்புச் சட்டை போராட்டம் நடத்திய காரணம் சிரிப்பு வரவழைக்கிறது என தெரிவித்தார்.

டங்க்ஸ்டன் திட்டம் வராது

டங்க்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் வராது. மீறி வந்தால் நான் முதல்வர் பதவியிலேயே இருக்க மாட்டேன் என்று ஏற்கெனவே சட்டப்பேரவையில் கூறியிருந்தேன். அதையும் மீறி சிலர் இதில் அரசியல் செய்து குளிர் காய நினைக்கிறார்கள் என்றார்.

மகாராஷ்டிரம்: திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அம்மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவு: முத்தரசன் இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்த... மேலும் பார்க்க

பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது என தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது என கூறினார். தம... மேலும் பார்க்க

அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி!

இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நிறுவிய நவீன வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அம்மாவட்டத்தின், நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காட்டுப்பகுத... மேலும் பார்க்க

மணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது!

மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.அம்மாநில காவல் துறையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து பராக் நதிக்கரையில் உள்... மேலும் பார்க்க