மாணவ, மாணவிகள் "அப்பா, அப்பா" என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: முதல்வர் ஸ்டாலின்
மணிப்பூர்: தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது!
மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அம்மாநில காவல் துறையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் இணைந்து பராக் நதிக்கரையில் உள்ள துயிசோலன் கிராமத்தில் கடந்த ஜன.9 அன்று மேற்கொண்ட சோதனையில் ஹமார் பீப்பல்ஸ் கன்வென்ஷன் (டெமாக்கட்ரிக்) எனும் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடம் இருந்து 20 வெடிக்குச்சிகள், 11 டெட்டோனேட்டர்கள், 44 சோப்பு டப்பாக்களில் நிரப்பப்பட்ட சுமார் 457 கிராம் அளவிலான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க:அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, குக்கி-ஜோ சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பெர்ஸாவல் மாவட்டத்தில் இருந்து அவர் ஏன் வந்தார் என்று விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு மத்தியில் நடைபெற்று வரும் கலவரத்தில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.