செய்திகள் :

ரயில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்: நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?

post image

ரயில்களில் அமருவதற்கு இடம் கொடுக்காமல் இருக்கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்களால் பயணிகள் பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். தொழில் சார்ந்தும் தொழிலுக்காவும்

சென்னை, திருநெல்வேலி, மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தில்லி, மும்பை என பல்வேறு மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிகள் ரயில் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள், பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர். இதனால் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற் வெள்ளிக்கிழமை மாலை முதல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அதிகயளவில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்திருந்ததால் ரயில் நிலையம் கூட்ட நெரிசலில் பரபரப்பாக காணப்பட்டது.

இதனால் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிக்க |ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு

இதனிடையே வெள்ளிக்கிழமை கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு ரயிலில் சாதாரண பெட்டியில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்தனர். அங்கு ஏற்கனவே இடம் பிடித்து இருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களின் பொருள்கள், உடமைகளை வைத்துக் கொண்டு பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என பயணிக்கும் பயணிகளை யாரையும் அமர இடம் கொடுக்காமலும், அது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் தகராறு, வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பொருட்களை வைத்துக் கொண்டு குழந்தைகள் முதியவர்கள் அமருவதற்கு கூட இடம் கொடுக்காமல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட வட மாநிலத்தவரின் செயலைக் கண்ட அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர், வடமாநில ரயில் பயணிகளின் இந்த செயலை தனது செல்போனில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சிடைய வைத்துள்ள.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரது ரயில் பயணமும் இனிமையாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மகாராஷ்டிரம்: திடீர் முடி உதிர்வு..வழுக்கையாகும் நிலை! பொதுமக்கள் அச்சம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் புல்தான மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்களின் பொதுமக்கள் சிலருக்கு திடீரென வழக்கத்தை விட அதிகமான தலைமுடி உதிர்ந்து, வழுக்கையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அம்மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவு: முத்தரசன் இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இந்த... மேலும் பார்க்க

பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது என தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது என கூறினார். தம... மேலும் பார்க்க

அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி!

இங்கிலாந்து நாட்டில் அவலட்சண முகத் தோற்றத்தை வெளிப்படுத்தும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.வடமேற்கு இங்கிலாந்து நாட்டின் கும்பிரியா எனும் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவலட்சணமான முகத் தோற... மேலும் பார்க்க

நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் படுகாயம்!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நிறுவிய நவீன வெடிகுண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.அம்மாவட்டத்தின், நக்சல்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள காட்டுப்பகுத... மேலும் பார்க்க

திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபட்டார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டாா். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். அவரது செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க