செய்திகள் :

குஜராத் விபத்துக்குக் காரணம் என்ன? தெரியும் வரை துருவ் ஹெலிகாப்டர்கள் பறக்கத் தடை

post image

துருவ் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் அனைத்தும் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் தெரிவித்திருக்கிறது.

அதிநவீன இரட்டை என்ஜின் கொண்ட இலகுரக ஹெலிகாப்டர், கடந்த 5ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் விழுந்து நொறுங்கி விபத்து நேரிட்ட சம்பவத்துக்குக் காரணம் என்ன என்று அறியப்படும்வரை, துருவ் ஹெலிகாப்டர்களை இயக்க வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாதுகாப்புப் படையில் இணைந்த துருவ் ஹெலிகாப்டர், 5.5 டன் எடையுள்ளது, இது 200 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற விழுந்து நொறுங்கி, விழுந்த வேகத்தில் தீப்பற்றி எரிந்தத.

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேர் பலியாகினர். இதையடுத்து அனைத்து துரவ் வகை ஹெலிகாப்டர்களும் தரையிறக்கப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆணடு மிகப்பெரிய நான்கு விபத்துகள் நேரிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில்லாமல், கடந்த சில மாதங்களில் மட்டும் மின்சாரம் துண்டிப்பு, கியர் பெட்டி செயலிழப்பு போன்றவை நேரிட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

கடலோரக் காவல் படையின் விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டரில் இருக்கும் பிரச்னை என்ன, விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து உண்மை நிலவரம் அறிந்த பிறகே துருவ் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும்: தேவேந்திர ஃபட்னவீஸ்

நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவதை உறுதி செய்யப் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறைக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக பழங்குடியினர் நலத் திட்டங்களை மறு ஆய... மேலும் பார்க்க

தலையில் பாய்ந்த துப்பாக்கி குண்டு: ஆம் ஆத்மி எம்எல்ஏ பலி! விபத்தா? கொலையா?

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தலையில் குண்டு துளைத்து தனது அறையில் பலியாகி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு லூதியான... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தடகள வீராங்கணை!

கேரளத்தில் 18 வயது தடகள வீராங்கனையை 5 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது த... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியால் தில்லிக்குப் பேரழிவு: பாஜக தலைவர்!

தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மீதான தாக்குதல்களை பாஜக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஷீஷ் மஹால், ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் பாடம் மற்றும் போஸ்டர்களை வ... மேலும் பார்க்க

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

அசாமில் 10 மாதக் குழந்தைக்கு மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அசாமில் பதிவான முதல் வழக்கு என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும் பார்க்க

புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு பாடம் எடுத்த டிஐஜி

பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் சுயமரியாதையை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை பெண் டிஜிஐ, புத்திசாலி குழந்தைகளைப் பெறுவது எப்படி? என்று சொல்லிக்கொடுத்த விடியோ வைர... மேலும் பார்க்க