செய்திகள் :

Hair Care: முடி வறட்சி முதல் முடி உதிர்வு வரை... வராமல் தடுக்கலாம்; வழி என்னென்ன?

post image

ழகான கூந்தல் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். அதில் வரக்கூடிய சில அடிப்படை பிரச்னைகளுக்காக தீர்வுகளைச் சொல்கிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

healthy hair

பொடுகு, ஒரு வகையான பூஞ்சையால் ஏற்படுகிறது. சிலருக்கு அது வேகமாகவும், சிலருக்கு மெதுவாகவும் பரவும். சிலருக்கு என்ன செய்தாலும் நீங்காது. காரணம், அவர்கள் ஸ்கால்ப்பின் தன்மை. மரபுக்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். பொடுகை எதிர்க்க ஆன்டி ஃபங்கல் ஷாம்பூ (anti-fungal shampoo) சிறந்தது. அவற்றில் உள்ள ஸிங்க் (zinc) அல்லது சல்பர் (sulphur) பொடுகை நீக்கவல்லவை.

இயற்கை முறையைப் பின்பற்ற நினைப்பவர்கள், முதல் நாள் இரவு ஊறவைத்த வெந்தயத்தை அடுத்த நாள் அரைத்து, தயிர் சேர்த்து, தலைக்குத் தேய்த்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்க் கலவையையும் பயன்படுத்தலாம். 'பொடுகுத் தொல்லை இருக்கும்போது எண்ணெய் பயன்படுத்தலாமா?' என்று கேட்கலாம். சிலருக்கு ஸ்கால்ப் வறண்டு போயிருப்பதால்கூட பொடுகு ஏற்படலாம் என்பதால், அவர்கள் எண்ணெய் வைப்பது அவசியம். ஏற்கெனவே தலை எண்ணெய்ப்பசையாக இருப்பவர்கள் ஆன்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ (anti-dandruff shampoo) பயன்படுத்துவது சிறந்தது.

சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள்வரை உதிர்வது இயல்புதான். புதிய முடிகள் முளைக்கும். முடி வளர்ச்சி சுழற்சியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். சிலருக்கு, முடி முளைக்கும் முதல் நிலையிலிருந்து, முடி வளரும் இரண்டாவது நிலை விரைவாகக் கடக்கப்பட்டு, முடி உதிரும் இறுதி நிலைக்கு விரைவாகத் தள்ளப்படுவதால், முடி சீக்கிரமாக உதிரலாம். உடல்நிலைக் காரணம், ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம் போன்றவை அதற்குக் காரணங்களாக இருக்கலாம். உங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய வேண்டும். தலைக்கு எண்ணெய் வைத்து ரத்த ஓட்டத்தைத் தூண்டும் வகையில் மசாஜ் செய்வது, ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரை வகைகள், மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கு அவசியமான இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது என முயலலாம்.

hair

இதற்கு உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாததே காரணம். நிறமி உற்பத்திக்கு பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் அவசியம். பி வைட்டமின்கள் குறைவாக உள்ள உணவுமுறையால் மெலனின் உற்பத்தி குறைந்து கேசம் நரைக்கிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுதல், கேசத்துக்கு எண்ணெய் மசாஜ் செய்தல், பேக் போடுதல் என முயலலாம். ஹேர் கலரிங் பண்ணும்போது அமோனியா ஃப்ரீ ஹேர் கலரை உபயோகிப்பது நல்லது. ஹெர்பல் ஹேர் கலர் பயன்படுத்துவது சிறப்பு.

செய்யக்கூடாது. அதில் பல தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கேசத்தின் வகை, அதற்கேற்ப ஸ்ட்ரெயிட்டனிங் முறை என, இதற்கு புரொஃபஷனல் சர்வீஸ் தேவை. வீட்டில் சுயமாகச் செய்துகொள்வது கேசப் பாதிப்புக்கு வழிவகுக்கும்.

Hair Straightening

முடி வறட்சிக்கு மரபு, சுருட்டை முடி எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டச்சத்துக் குறைபாடு காரணத்தால், அந்த வறண்ட கேசத்தில் நுனிப்பிளவு ஏற்படலாம். அந்தப் பிளவுகளை நீக்குவதற்கு எனப் பிரத்யேகக் கருவிகள் உள்ளன. அவற்றின் மூலம் பிளவை மட்டும் எடுக்கலாம். வறட்சி இருப்பவர்கள் கண்டிஷனர் உபயோகித்தால், இந்தப் பிளவு மேலும் வராமல் தடுக்கலாம்.

விகடன் ஆடியோ புத்தகங்கள்

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Nail polish: டார்க் கலர் நெயில் பாலிஷ் விரும்பிகளா நீங்க?

நீளமாக நகம் வளர்த்து, டார்க் கலர்களில் நெயில் பாலிஷ், நெயில் ஆர்ட் செய்து கொள்வதுதான் இப்போதைக்கு நக அழகியல் டிரெண்ட். நகங்களை நோய்த்தொற்று இல்லாமல், உடையாமல், பளபளப்பாக எப்படிப் பராமரிப்பது? அழகுக்கல... மேலும் பார்க்க

Health & Beauty: காலை நேர குளியலில் ஒளிந்திருக்கிறது அழகும் ஆரோக்கியமும்..!

சரும பராமரிப்பு என்பது சருமத்தை வெள்ளை வெளேரென்று மாற்றுவது கிடையாது. உங்களுடைய ஒரிஜினலான நிறத்தை பிளாக் ஹெட், ஒயிட் ஹெட், டெட் செல் என எந்த மாசு மருவும் இல்லாமல், ரோஜாவின் ஒற்றை இதழ்போல மென்மையாக வெள... மேலும் பார்க்க

Beauty Tips: அழகான முகத்துக்கு 6 டிப்ஸ்!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்துக்கு என்ன தீர்வு? கருவளையம் பாதாம் எண்ணெய், கற்றாழைச்சாறு, ரோஸ் வாட்டர் கலவையைக் கருவளையம் இருக்கும் பகுதிகளிலோ, முகம் முழுக்கவோ அப்ளை செய்யவும். 10, 15 நிமிடங்கள் வைத்... மேலும் பார்க்க