கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
BB Tamil 8: "I Love You சொல்லணும்னா ஓப்பனாவே சொல்லுவேன்" - விஷாலிடம் பேசியது குறித்து அன்ஷிதா
பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் 91வது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இதில் அக்கா, தம்பி எனப் பழகிய ஜெஃப்ரி, அன்ஷிதா இருவருமே கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் பன் லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு ஜாலியாக பதிலளித்திருந்தனர். அதில், பிக்பாஸ் வீட்டில் அன்ஷிதா, விஷாலின் காதில் ரகசியமாகச் சொன்ன விஷயம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அன்ஷிதா, "நான் ஐ லவ் யூ சொல்லவில்லை. அப்படி ஐ லவ் யூ சொல்வதாக இருந்தால், ஓப்பனாகவே சொல்வேன். நான் விஷால் காதில் பேசியது வேறு. ஆனால் வெளியே பலர் வேற மாதிரி பேசிட்டு இருக்குறாங்க. நானும் அதையெல்லாம் பார்த்தேன். நான் விஷால் காதில் சொன்னது என்னுடைய எக்ஸ் உடைய பெயர்தான். அது அர்னவ் கிடையாது, விஷாலும் கிடையாது. " என்றார்.
அர்னவ் செல்லம்மா சீரியலில் நடிக்கும் போது அன்ஷிதாவோடு நெருங்கிப் பழகியதாகவும், திவ்யா மற்றும் அர்னவ் வாழ்க்கையில் பிரச்னைகள் வந்ததாகச் சர்ச்சைகள் வெடித்ததாகச் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டன. அதைக் குறிப்பிடும் வகையில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்ற கேள்விக்கு, "வெற்றியாளர் யார் என்று உலகத்துக்கே தெரியும். முத்துக்குமரன்தான் வெற்றியாளர். அவருக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது. நல்ல உழைப்பாளி அவர்" என்று பதிலளித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...