செய்திகள் :

BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு

post image

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் சௌந்தர்யாவும் கடந்த சீசன் போட்டியாளர் விஷ்ணுவும் அதிகாரபூர்வமாக தங்களது காதலை உலகத்துக்குத் தெரிவித்திருக்கிறார்கள். சௌந்தர்யா தற்போது ஃபினாலேவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிற சூழலில், விஷ்ணுவிடம் பேசினோம்.

 ‘’வில் யூ மேரி மீ’னு சௌந்தர்யா உங்ககிட்டக் கேட்ட அந்தத் தருணம் பத்தி..

‘’எனக்கு ஃப்ரண்டா அறிமுகம் ஆனவங்க அவங்க. சில வருஷமா பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் ஒருத்தரையொருத்தர் தெரியும். நானும் ரொம்ப முயற்சி பண்ணிதான் அந்த நிகழ்ச்சிக்குள் போனேன். அவங்களும் அப்படிதான் போயிருக்காங்க. அவங்களுக்கு என்னைப் பிடிக்கும்னு ரெண்டு பேரையும் தெரிஞ்ச சில ஃப்ரண்ட்ஸ் மூலமா கேள்விப்பட்டிருக்கேன். எனக்குமே அவங்களைப் பிடிக்கும். ஆனா, ’முதல்ல ப்ரப்போஸ் செய்தா பட்னு ஏதாவது நெகடிவா சொல்லிடுவாங்களோனு சில பசங்க பயப்படுவாங்களே, அதே நினைப்பு வர சைலண்டா இருந்தேன்.

சௌந்தர்யா - விஷ்ணு

அன்னைக்கு அவங்க ஃப்ரண்டா சாதாரணமாதான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன். அதுக்கு மேல அங்க நடந்ததெல்லாம் எதிர்பாராதது. வெளியில சிலர் சொல்லக்கூடும், இதெல்லாம் ஸ்கிரிப்ட், டி.ஆர்.பி.க்காக  எதையாச்சும் பண்ணுவாங்கனு. ஆனா ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா’னு ஒரு பொண்ணு ஊர் அறிய கேக்கறதை அப்படி எடுத்துக்கக் கூடாது. ஸோ, இப்ப சொல்றேன், யெஸ், நாங்க காதலிக்கிறோம். இப்பதான முறைப்படி சொல்லியிருக்கோம், அதனால கொஞ்ச நாள் லவ்வர்ஸா வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு சீக்கிரமே கல்யாணம் செய்துக்குவோம், அதாவது மேக்சிமம் இந்த வருஷக் கடைசிக்குள்.

பிக்பாஸ் எனக்கு போன வருஷம் டைட்டில் தரல. ஆனா இந்த வருஷம் அழகான வாழ்க்கையைத் தந்திருக்குனு சொல்வேன். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கும்னு சொல்வாங்க இல்லையா, அது இப்ப என் வாழ்க்கையில நடந்திருக்கு’’

சௌந்தர்யா

’’பிக்பாஸ் 2 வது சீசன்ல தாடி பாலாஜிக்கும் மனைவி நித்யாவுக்குமிடையிலான பிரச்னை முடிஞ்சிடுச்சு, சேர்ந்துட்டாங்க’னு சொன்னாங்க. வெளியில் வந்த மறு வாரமே ‘அப்படில்லாம் இல்ல’ எனச் சொல்லிட்ட ரெண்டு பேரும் இப்ப வரை தனியாதான் இருக்காங்க, இதெல்லாம் பார்க்குறப்பதான்..’’

அவங்க பிரச்னை பத்தி எனக்குத் தெரியலை. அதனால அதுக்குள் போகக் கூடாது. என்னைப் பொறுத்தவரை மலையாள பிக்பாஸ்ல கலந்துகிட்ட பியர்லி-ஸ்ரீனிஷ்  ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகிட்டாங்க. தமிழ்ல பிக்பாஸ் மூலம் ரியல் லைஃப்ல சேர்ந்த முதல் ஜோடின்னா அது நாங்கதான். என்ன ஒரு வித்தியாசம்னா அவங்க ஒரே சீசன்ல கலந்துகிட்டவங்க. நாங்க அடுத்தடுத்த சீசன்கள்ல கலந்துகிட்டவங்க, அவ்ளோதான். பாசிட்டிவா நடந்ததை மட்டும் எடுத்துக்குவோமே’’

பிக்பாஸ் சீசன் 8

சௌந்தர்யா எப்படி கேம் ஆடுறாங்க.. டைட்டில் வெல்வாங்கனு எதிர்பார்க்குறீங்களா?

இந்த சீசன்ல் கலந்துகிட்ட நிறைய போட்டியாளர்களுக்கு ஏற்கனவே ஃபேம் இருக்கு. ஜாக்குலின், ரஞ்சித் சார், ரவீந்தர் சார்னு நிறைய உதாரணம் சொல்லலாம். ஆனா சௌந்தர்யாவை இந்த ஷோதான் பெரும்பாலான மக்கள் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. ரொம்ப முயற்சி செய்ததன் மூலமே அவங்களுக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைச்சது. தனக்குக் கிடைச்ச சான்ஸை சரியா பயன்படுத்திட்டு இருக்காங்க. அங்க எந்த பர்ஃபார்மன்ஸும் பண்ணாமல்லாம் 90 நாட்களை யாராலும் கிராஸ் செய்யவே முடியாது. என் லவ்வர்ங்கிறதுக்காகச் சொல்லல, இதே நிகழ்ச்சியில நானுமே நூறு நாள் இருந்தவங்கிற முறையில சொல்றேன், இந்த நிகழ்ச்சிக்கு நேர்மையா நடந்துட்டு வர்றாங்க. அது சிலருக்கு எரிச்சலை உண்டாக்குது. அவங்க இவங்க மேல வன்மத்தைக் கக்குறாங்க. அவங்களுடைய ஆதரவாளர்கள் வெளியில அதாவது சோஷியல் மீடியாவுல இவங்களுக்கு எதிராப் பேசுறாங்க, அவ்ளோதான். நான் பிக்பாஸ் ரசிகர்கள்கிட்டக் கேட்டுக்கறது ஒண்ணுதான், சோஷியல் மீடியா பாத்து ஓட்டு போடாதீங்க, சேனல்ல தினமும் ஒளிபரப்பாகிற ஒரு மணி நேர எபிசோடு, 24 மணி நேரமும் போயிட்டிருக்கிற லைவ் பார்த்து அதன் மூலம் உங்களுக்குப் பிடிச்ச போட்டியாளர் யாரோ அவங்களுக்கு ஓட்டுப் போடுங்கனுதான்’’

பிக்பாஸ் சீசன் 8

’’சௌந்தர்யாவுக்கு வெளியில பெரிய அளவுல பி.ஆர் ஒர்க் நடக்குது’னு ஒரு குற்றச்சாட்டை சக போட்டியாளர்கள் சொல்றாங்களே..

‘’இந்த ஷோவுக்கு போகிற எல்லா போட்டியாளர்களுமே உள்ளே போறப்ப தெரிஞ்சவங்க, ஃப்ரண்ட்ஸ் சர்கிள்ல சப்போர்ட் பண்ணுங்கனு கேட்டுட்டுதான் போறாங்க. இதை பி.ஆர் ஒர்க்னு சொல்ல முடியுமா?

அதுவும் போக இன்னொரு விஷயமிருக்கு. அங்க போன முதல் வாரத்துலயே சுத்தி அறுபது கேமரா இருக்குங்கிறதெல்லாம் மறந்துடும். அதனால அங்கிட்டு ஒண்ணும் இங்கிட்டு ஒண்ணும் பேசறவங்க, வன்மத்தை கக்குறவங்களையெல்லாம், ரொம்ப சுலபமா மக்கள் அடையாளம் கண்டு பிடிச்சிடுவாங்க. அப்படிக் கண்டுபிடிச்சிட்டா எப்படி ஓட்டு போடுவாங்க? அதனால பி.ஆர். டீம் வச்சிருந்தா நூறு நாள் நல்ல பப்ளிசிட்டி வேணும்னா கிடைக்கும். டைட்டிலுக்கு அது கியாரண்டி கொடுக்காது’’

சௌந்தர்யா டைட்டில் வாங்க வாய்ப்பிருக்கானு கேட்டா, அவங்க அதுக்குத் தகுதியானவங்கனுதான் நான் சொல்வேன், கிடைச்சா ‘நான் போன வருஷம் வாங்க முடியாததை வாங்கியிருக்காங்க’னு சந்தோஷப்படுவேன். இல்லையா, இவ்ளோ நாள் இருந்த

தே சாதனைதான்னு சொல்லி அப்பவும் ஆரத்தழுவி ரீசிவ் பண்ணுவேன்’’

Siragadikka Aasai: புதிய காதல் கதை; ரோகிணி பஞ்சாயத்து - நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியும், மனோஜும் பணத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். எப்படி பணத்தைப் புரட்டுவது, எப்படி ஏமாற்றிய நபரைக் கண்டுப்பிடிப்பது என பேசிக் கொண்டிருக்கிறார... மேலும் பார்க்க

BB Tamil 8: சூர்யாவாக அருண்; த்ரிஷாவாக சௌந்தர்யா - பிக் பாஸ் வீட்டில் `ஆடிய ஆட்டம் என்ன?’

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜைக் காப்பாற்றிய முத்து... நன்றி உணர்வு இல்லாத ரோகிணி

சிறகடிக்க ஆசை சீரியலில் நேற்றைய எபிசோடில் மனோஜ், ரோகிணி ஷோரூமில் இருக்கும் போது, அங்கு ரவி, ஸ்ருதி வருகின்றனர். முத்துவும் மீனாவும் வர சொன்னதாக சொல்கின்றனர்.சற்று நேரத்தில் முத்து, மீனா அண்ணாமலை, விஜய... மேலும் பார்க்க

BB Tamil 8: பிக் பாஸில் மீண்டும் என்ட்ரி ஆன அர்ணவ்; எதிர்க்கும் போட்டியாளர்கள்; என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான ... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 92: PR Team சர்ச்சை; கண்ணீர் விட்ட சவுந்தர்யா; முத்து - ரயான் - ஆட்டம் ஆரம்பம்

கிளைமாக்ஸ் நெருங்குவதால் பல டிவிஸ்ட்டுகளைத் தந்து சுவாரசியத்தைக் கூட்ட பிக் பாஸ் டீம் கருதுகிறது போல. அதில் ஒன்றுதான் ‘Wildcard Knockout’. முன்னாள் போட்டியாளர்கள் ‘விருந்தினர்களாக’ அல்லாமல் போட்டியாளர... மேலும் பார்க்க