கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
ஆளுநர் வெளியேறவில்லை.. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர்: எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்துச் செல்லவில்லை, திட்டமிட்டு வெளியேற வைக்கப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தனது உரையுடன் ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கிவைப்பதற்காக இன்று காலை வருகை தந்தார். பேரவை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு பேரவைக் கூட்டம் தொடங்கியதும், பேரவை மண்டபத்துக்கு வந்த ஆளுநரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவை முதன்மைச் செயலா் கி.சீனிவாசன் ஆகியோா் வரவேற்றனர்.
வழக்கம் போல பேரவைக் கூடியதும், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, ஆளுநர் ஆர்.என். ரவி அவையிலிருநது வெளியேறினார்.
இதற்குக் காரணமாக, பேரவையில் முதலில் தேசிய கீதம் வாசிக்க ஆளுநர் ரவி வலியுறுத்தியிருந்ததாகவும், ஆனால், வழக்கம் போல தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதாக, எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, பேசுகையில், தமிழ்நாடு சட்டபேரவையை ஆளுநர் புறக்கணித்துச் செல்லவில்லை. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். ஆளுநரை உரையாற்றக் கூடதென்று திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். 3 ஆண்டுகளாக ஒரே நடைமுறையைத்தான் சட்டப்பேரவை கடைப்பிடித்து வருகிறது. பேசியதையே பேசுகிறது திமுக என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தொடா்ந்து, கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடியுள்ளது. அதில், ஜனவரி 11ஆம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.