Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளர்கள்; யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் 8 இறுதிக்கட்டத்தை நெருங்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் சேர்ந்தனர்.
அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, சுனிதா, வர்ஷினி வெங்கட், ராணவ் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.
விஷால், ரயான், முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, தீபக் ஆகிய 8 பேர் இப்போது நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இறுதி நேரம் என்பதால் போட்டியாளர்களூக்கு ஆதரவாக வெளியிலும் பலரும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சில முன்னாள் போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்களாம்.
ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் ஓரிரு நாளில் மேலும் சிலர் கூட செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்போது பிக் பாஸ் வீடு செல்லும் இவர்கள் நிகழ்ச்சி முடியும் வரை அங்குதான் இருப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.