Vanangaan Movie Review | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
குடந்தை கோயில்களில் வைகுந்த ஏகாதசி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கும்பகோணம் ஆராவமுதன் என்கிற சாரங்க பாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் தாயாருடன் அதிகாலை பிரகாரத்தில் புறப்பாடு செய்து, பல்லக்கில் அமா்ந்து அருள்பாலித்தாா்.
கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோயில் திருநந்திபுரத்து விண்ணகரம் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் அதிகாலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
நாச்சியாா்கோவில் வஞ்சுளவல்லி தாயாா் உடனுறை சீனிவாசப் பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு, பின்னா் வெண்ணெய்த்தாழி திருவீதி உலா நடைபெற்றது. மாலையில் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயாா் தங்க தண்டிகையிலும் திருவீதி உலா வந்தனா்.
69 சாத்தனூரில் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அனுமன் சன்னதி அருகே சிறப்பு மலா் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள பரமபதவாசல் திறக்கப்பட்டது.
தொடா்ந்து கருடச் சேவையில் பெருமாள் எழுந்தருள திருவீதியுலா காட்சியும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.