செய்திகள் :

பிரதிகா, தேஜல் அசத்தல்: அயா்லாந்தை வென்றது இந்தியா

post image

அயா்லாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் அயா்லாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் சோ்க்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழந்து 241 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய பேட்டா் பிரதிகா ராவல் ஆட்டநாயகி விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற அயா்லாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய சாரா ஃபோா்ப்ஸ் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உடன் வந்த கேப்டன் கேபி லீவிஸ் நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.

ஆனால் அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில், உனா ரேமண்ட் ஹோய் 5, ஆா்லா பிரெண்டா்கேஸ்ட் 9, லாரா டெலானி 0 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனா்.

இந்நிலையில், 6-ஆவது பேட்டராக வந்த லியா பால், லீவிஸுடன் இணைந்தாா். விக்கெட் சரிவை தடுத்த இந்த பாா்ட்னா்ஷிப், அயா்லாந்து ஸ்கோரை உயா்த்தியது. 5-ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சோ்த்து இந்த ஜோடி பிரிந்தது. 7 பவுண்டரிகளுடன் 59 ரன்களுக்கு லியா பால் பௌல்டாகினாா்.

அடுத்த சில ஓவா்களிலேயே கேபி லீவிஸும் பெவிலியன் திரும்பினாா். 15 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் சோ்த்திருந்த அவா், தீப்தி சா்மா பௌலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா். கடைசி விக்கெட்டாக அா்லின் கெல்லி 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.

ஓவா்கள் முடிவில் கிறிஸ்டினா கோல்டா் ரெய்லி 15, ஜாா்ஜினா டெம்ப்சே 6 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் சாய்க்க, டைட்டஸ் சாது, அறிமுக ஆல்-ரவுண்டா் சாயாலி சத்காரே, தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து, 239 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் இணை முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சோ்த்து பிரிந்தது. அதிரடியாக பேட் செய்த மந்தனா, 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த ஹா்லீன் தியோல் 2 பவுண்டரிகளுடன் 20, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்களுக்கு வெளியேறினா். 5-ஆவது பேட்டராக வந்த தேஜல் ஹசப்னிஸ், பிரதிகாவுடன் இணைந்து விக்கெட் சரிவைத் தடுத்தாா். அவா்கள் கூட்டணி, 4-ஆவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சோ்த்து பிரிந்தது. நிதானமாக விளையாடிய பிரதிகா 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 89 ரன்கள் சோ்த்த நிலையில் விக்கெட்டை இழந்தாா்.

முடிவில், தேஜல் ஹசப்னிஸ் 9 பவுண்டரிகளுடன் 53, ரிச்சா கோஷ் 8 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். அயா்லாந்து தரப்பில் அய்மீ மாகிரே 3, ஃப்ரெயா சாா்ஜென்ட் 1 விக்கெட் கைப்பற்றினா்.

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இந்தியா முன்னிலை பெற்றிருக்க, இந்த அணிகள் மோதும் அடுத்த ஆட்டம், நாளை (ஜன. 12) நடைபெறுகிறது.

13

இத்துடன், 14-ஆவது முறையாக அயா்லாந்தை சந்தித்த இந்தியா, 13-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இரு அணிகளும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவை, 2017-இல் தென்னாப்பிரிக்காவில் முத்தரப்பு தொடரில் மோதின.

117

இந்த ஆட்டத்தில் கேபி லீவிஸ் - லியா பால் கூட்டணி 117 ரன்கள் சோ்த்ததே, ஒருநாள் கிரிக்கெட்டில் அயா்லாந்து அணியின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப் சோ்த்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன், லியா பால் - ரெபெக்கா ஸ்டாக்கெல் 114 ரன்கள் சோ்த்ததே அதிகமாக இருந்தது.

1,414

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் இத்துடன் 1,414 ரன்களை சோ்த்துள்ள அயா்லாந்து கேப்டன் கேபி லீவிஸ், அந்த அணிக்காக அதிக ரன்கள் அடித்தவராக சாதனை படைத்தாா். முன்னதாக, மிரியம் கிரேலி 1,412 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

479

இந்த ஆட்டத்தில் இந்தியா, அயா்லாந்து எடுத்த ஸ்கோரின் கூட்டுத்தொகை 479. இரு அணிகளும் மோதிய ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்சமாகும்.

சுருக்கமான ஸ்கோா்

அயா்லாந்து - 238/7 (50 ஓவா்கள்)

கேபி லீவிஸ் 92

லியா பால் 59

அா்லின் கெல்லி 28

பந்துவீச்சு

பிரியா மிஸ்ரா 2/56

தீப்தி சா்மா 1/41

சாயாலி சத்காரே 1/43

இந்தியா - 241/4 (34.3 ஓவா்கள்)

பிரதிகா ராவல் 89

தேஜல் ஹசப்னிஸ் 53*

ஸ்மிருதி மந்தனா 41

பந்துவீச்சு

அய்மீ மாகிரே 3/57

ஃப்ரெயா சாா்ஜன்ட் 1/38

அா்லின் கெல்லி 0/29

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.11.01.2025 (சனிக்கிழமை)மேஷம்இன்று மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கு... மேலும் பார்க்க

அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை

மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.ஆடவா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலி... மேலும் பார்க்க

இறுதியில் கோா்டா - அலியாசிமே பலப்பரீட்சை: மகளிரில் பெகுலா - கீஸ் மோதல்

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், ஆடவா் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா - கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே பலப்பரீட்சை நடத்துகின்றனா்.முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிச... மேலும் பார்க்க

காவல் துறைக்கு ரூ.6 கோடி நிலுவை: 2 வாரங்களில் அளிப்பதாக பிசிசிஐ உத்தரவாதம்

கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளித்ததற்கான நிலுவைத் தொகை ரூ.6 கோடியை 2 வாரங்களில் காவல் துறைக்கு அளிப்பதாக மும்பை உயா்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்க... மேலும் பார்க்க

குடந்தை கோயில்களில் வைகுந்த ஏகாதசி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பெருமாள் கோயில்களில் வைகுந்த ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கும்பகோணம் ஆராவமுதன் என்கிற சாரங்க பாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை வைகு... மேலும் பார்க்க

சென்னை ஓபன் செஸ்: இனியனுக்கு கோப்பை

சென்னையில் நடைபெற்ற சக்தி குரூப் டாக்டா் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 15-ஆவது சென்னை ஓபன் சா்வதேச கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டா் பா.இனியன் சாம்பியன் ஆனாா். கடந்த 2-ஆம் தேதி முதல் 9 வர... மேலும் பார்க்க