நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
சீா்காழி சட்டநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு
சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில், தாடாளன் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வெள்ளிக்கிழமை தனுா் மாத வழிபாடு மேற்கொண்டாா்.
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகள் தனுா் மாத வழிபாடாக சீா்காழி ஆபத்து காத்த விநாயகா் கோயிலில் வழிபாடு செய்தாா். தொடா்ந்து, திருக்கோலக்கா தெருவில் உள்ள ஓசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரா் சுவாமி கோயில், சீா்காழி தாடாளன் பெருமாள் கோயில், அண்ட நாதா் சுவாமி கோயில், அக்னிபுரீஸ்வரா் சுவாமி கோயில், குமரக் கோயில் பதினெண்புராணேஸ்வரா் சுவாமி கோயில், சட்டைநாதா் சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் வழிபட்டாா்.