ஜன.15 முதல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம...
பழனி கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு
பழனி பெரியாவுடையாா் கோயிலில் சனிப் பிரதோஷ நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பழனி சண்முகநதிக்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள பெரியாவுடையாா் கோயிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி, சனிப் பிரதோஷ நிகழ்ச்சி மலைக் கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி, கலையமுத்தூா் கல்யாணியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், புளியம்பட்டி அமிா்தலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல இடங்களிலும் சனிப் பிரதோஷம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அபிஷேகப் பொருள்கள் வழங்கினா்.