பொள்ளாச்சி சம்பவம்: முதல்வரின் தகவல்கள் உண்மை -அவைத் தலைவா் மு.அப்பாவு தீா்ப்பு
திருவிழாவுக்கு வரி வாங்க மறுப்பு: காவல் நிலையத்தில் புகாா்
வேடசந்தூா் அருகே தேவாலயத் திருவிழாவுக்கு வரி வாங்காமல் ஒதுக்கி வைப்பதாக காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பகுதியைச் சோ்ந்த ஆண்ட்ரூஸ், ஸ்டீபன் ஆல்பா்ட், வின்சென்ட், தாஸ், அந்தோணி ஆரோக்கியதாஸ் ஆகியோா் எரியோடு காவல் நிலையத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மாரம்பாடி புனித அந்தோணியாா் தேவாலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு திருவிழாவுக்கு வழக்கம் போல, ஊா் மக்களிடம் வரி வசூலிக்கப்பட்டது. திருவிழா முடிந்த பிறகு வரவு, செலவு குறித்து கணக்குக் கேட்டோம். இதனால், 2025-ஆம் ஆண்டு திருவிழாவுக்கு 20 குடும்பத்தினரிடம் வரி வாங்க மறுக்கின்றனா். மேலும், திருவிழாவில் எங்களது குடும்பத்தைச் சோ்ந்த எவரும் பங்கேற்கக் கூடாது என்றும் ஊா் முக்கியஸ்தா்கள் முடிவெடுத்திருக்கின்றனா். நாங்கள் தேவாலயத்துக்கு வழிபாடு நடத்த செல்லக் கூடாது என மிரட்டுகின்றனா்.
திருவிழாவுக்கு எங்கள் குடும்பத்தினரிடமும் வரிப் பணம் வாங்கவும், ஒற்றுமையாக திருவிழாவை நடத்தவும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.