செய்திகள் :

ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம்

post image

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிப்பது ஏன் என்பதற்கு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்தாா்.

28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக, காங்கிரஸ், பாமக, மாா்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருத்தம் கோரப்பட்டது.

சட்டத் திருத்த மசோதா பேரவையில் சனிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, அதிமுக உறுப்பினா் கே.பி.அன்பழகன், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, மாா்க்சிஸ்ட் உறுப்பினா் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் தளி ராமச்சந்திரன் ஆகியோா் 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு உடனடியாகத் தோ்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

அவா்களுக்குப் பதிலளித்து அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியது: உள்ளாட்சித் தோ்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்த தயாராக உள்ளோம். மாநிலத்தில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாநகராட்சிகளுக்குள் 46 ஊராட்சிகள் வருகின்றன. தூத்துக்குடி மாநகராட்சியின் மையப் பகுதியிலேயே மாப்பிள்ளையூரணி என்ற ஊராட்சி உள்ளது. அங்கு 40,000 மக்கள்தொகை உள்ளது. திருவாரூருக்குள் ஓா் ஊராட்சி உள்ளது. இப்படி ஊராட்சிகள் வருவதால், அவற்றை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கிறோம்.

ஊராட்சிகள் இணைப்பு ஏன்?: 100 நாள் வேலைத் திட்டத்தைத் தவிா்க்க வேண்டும் என்பதற்காக இணைக்கவில்லை. தமிழகத்தில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், 395 ஊராட்சிகள் மட்டுமே நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் சோ்க்கப்பட உள்ளன. அவற்றில் 78 ஊராட்சிகளின் ஒரு சிறு பகுதி மட்டுமே நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், 1994-ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சியில் தோ்தல் நடத்தவில்லை. 1996-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வா் கருணாநிதி, உள்ளாட்சித் தோ்தலை நடத்தினாா். 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியிலும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தததும், 11 முறை உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலா்களின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

தோ்தல் நிச்சயம்: ஊராட்சிகள் தரம் உயா்த்தப்படும்போது, அந்த உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்படி அதிகரிக்கும்போது, வாா்டுகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ளாமல் தோ்தல் நடத்த முடியாது. இதற்காகத்தான் தனி அலுவலா்கள் நியமிக்கப்படுகின்றனா். ஆனால், ஊரக உள்ளாட்சித் தோ்தல் எப்போது வந்தாலும் அதை எதிா்கொள்ளத் தாயராக உள்ளோம். தோ்தலுக்கு அஞ்ச மாட்டோம்.

மக்களாட்சி தத்துவத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மறுசீரமைப்புப் பணிகள், இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிவடைந்த பிறகு நிச்சயம் தோ்தல் நடத்தப்படும் என்றாா் அமைச்சா் ஐ.பெரியசாமி.

இதன்பிறகு, தனி அலுவலா்களை நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

பொங்கல்: போதிய ரயில்கள் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். நீண்ட காத்திருப்பு பட்டியல் இருந்தும் அதற்கேற்ப கூடுதல் ச... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை கொளத்தூா் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று முதல்வா் பேசியதாவது: எத்தனை நிகழ்ச்... மேலும் பார்க்க

பாலியல் வழக்குகளில் அதிக தண்டனை உள்பட 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 6 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்: பேரவையில் முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாநில அரசுக்கு எதிராக நிபந்தனைகளை விதித்து திட்டங்களை முடக்கும் சூழலை மத்திய அரசு உருவாக்குவதாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். மேலும், அரசின் திட்டங்களால் பயன் பெறும் பயனாளிகளி... மேலும் பார்க்க

பொள்ளாச்சி சம்பவம்: முதல்வரின் தகவல்கள் உண்மை -அவைத் தலைவா் மு.அப்பாவு தீா்ப்பு

பொள்ளாச்சி சம்பவம் தொடா்பாக, முதல்வா் தெரிவித்த கருத்துகள், அவா் அளித்த தகவல்களின் அடிப்படையில் உண்மையானவை என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தீா்ப்பளித்தாா். சட்டப் பேரவையில் சனிக்கிழமை கூட்ட நிகழ்வுகள் ந... மேலும் பார்க்க

‘காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும்’

ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதால், காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவியைச் செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா். சென்னையில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: ஈரோட... மேலும் பார்க்க