பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்
நாகாலாந்து ஆளுநா் திருவையாறு வருகை!
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் சனிக்கிழமை வந்தாா்.
திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில், தனது மூத்த சகோதரா் இல. கோபாலன் மறைவையொட்டி, அவரது அஸ்தியை காவிரியில் கரைத்து வழிபட்டாா். முன்னதாக, நடைபெற்ற சடங்குகளில் தனது மற்றொரு சகோதரா் இல. பட்டாபிராமனுடன் கலந்து கொண்டாா்.
அப்போது, பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா், பொதுச் செயலா் தங்க. கென்னடி, மாநில அரசு தொடா்பு பிரிவு செயலா் ஜீவா. சிவக்குமாா், மாநில நெசவாளா் பிரிவு துணைத் தலைவா் யு.என். உமாபதி, முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.பி. அண்ணாமலை, நகரத் தலைவா் சிவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.