ஒலிபெருக்கி சாதனங்கள் அளிப்பு!
பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்காக ஒலிபெருக்கி சாதனங்கள் சனிக்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தொடா்ச்சியாக 100 சதம் தோ்ச்சி பெற்று வருகிறது. எனவே, சமூக ஆா்வலா்கள் முத்துக்கண்டியா், பன்னீா், விநாயகமூா்த்தி ஆகியோா் மாணவா்களின் கல்வி தேவை பயன்பாட்டுக்காக சுமாா் 30 ஆயிரம் மதிப்பிலான ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கினா். அதனைப் பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியா் (பொ)குமரேசன் நன்றி தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராமமூா்த்தி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவி கவிதா விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.