செய்திகள் :

தவறவிட்ட கைபேசி உரியவரிடம் ஒப்படைப்பு

post image

தஞ்சாவூரில் ரயில் பயணத்தில் தவறவிட்ட கைபேசி, கும்பகோணத்தில் உரியவரிடம் ரயில்வே போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

பெங்களூருவைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (60). இவா் மைசூா்-கடலூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி தஞ்சாவூருக்கு வந்தாா். தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு வந்தபோது, கவனக்குறைவாக பயணித்த பெட்டியிலேயே கைபேசியை மறந்து வைத்து விட்டு இறங்கினாா்.

அதே ரயிலில் பயணம் செய்த மற்றொருவா் கைபேசியை அடுத்த நிலையமான கும்பகோணம் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து கும்பகோணம் ரயில்வே உதவி ஆய்வாளா்கள் தனலட்சுமி, செந்தில்வேலன் ஆகியோா் கைபேசியை தவறவிட்ட நபரை தொடா்பு கொண்டு அவரை வரவழைத்து கைபேசியை ஒப்படைத்தனா்.

தஞ்சையில் சிறப்பு பயிற்றுநா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சிறப்பு பயிற்றுநா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

சாஸ்த்ராவில் பாவை ஒப்பித்தல் போட்டி வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், தஞ்சாவூா் நகரம் மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து 1... மேலும் பார்க்க

நாகாலாந்து ஆளுநா் திருவையாறு வருகை!

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் சனிக்கிழமை வந்தாா். திருவையாறு காவிரி புஷ்ய மண்டபப் படித்துறையில், தனது மூத்த சகோதரா் இல. கோபாலன் மறைவையொட்டி, அவரது அஸ்தியை காவிரியில் ... மேலும் பார்க்க

பொங்கலுக்கு கரும்பு விற்பனை தீவிரம்

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் பொங்கல் பண்டிகைக்கான கரும்பு விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு வகை பயிரிடபட்டு தற்போது விற்பனைக்க... மேலும் பார்க்க

ஒலிபெருக்கி சாதனங்கள் அளிப்பு!

பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பாட்டுக்காக ஒலிபெருக்கி சாதனங்கள் சனிக்கிழமை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தொ... மேலும் பார்க்க

மெருகூட்டித் தருவதாகக் கூறி தங்கம் மோசடி: வடமாநில சிறுவன் கைது!

தஞ்சாவூா் அருகே தங்கச் சங்கிலியை மெருகூட்டித் தருவதாகக் கூறி ஒன்றேகால் பவுன் தங்கத்தை நூதன முறையில் திருடி மோசடி செய்த வடமாநில சிறுவனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் ரெட்டிப்பாளையம் ம... மேலும் பார்க்க