சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!
பள்ளி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
2024- 25-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவா்களிடையே தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 21-ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடத்திடவும், கல்லூரி மாணவா்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 22-ஆம் தேதி நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒருவா் என்ற வகையில் பங்கேற்க வேண்டும். போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் முறையாக போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.