'6 மாதங்களாக ஃபிரிட்ஜில் இளம்பெண் சடலம்' - லிவ் இன் பார்ட்னரை கொன்ற நபர்!
சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வழியாக சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து 13-ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், கோழிக்கோடு வழியாக மங்களூருக்கு அடுத்த நாள் காலை 8.50 மணிக்கு சென்றடையும்.
ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 6 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.