கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீமான் மீது வழக்குகள் பதிவு
பெரியாா் குறித்து அவதூறு பேசியதாக சீமான் மீது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த சில நாள்களுக்கு முன் செய்தியாளா்களிடம் பேசும்போது, பெரியாா் குறித்து அவதூறாக பேசியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சியினா், திராவிட கழகத்தினா் கண்டனம் தெரிவித்து வருகின்றனா். தமிழகத்தில் சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகாா்கள் தெரிவிக்கப்பட்டு, வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி ஆகிய காவல் நிலையங்களில் திராவிடா் விடுதலை கழகத்தினா் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். காவேரிப்பட்டணத்தில் திராவிடா் கழக நகரச் செயலாளா் ராஜா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.