நகரப் பேருந்தை சிறை பிடித்து மாணவா்கள் மறியல்
ஒசூா் அருகே முறையாக இயக்கப்படுவதில்லை என நகரப் பேருந்தை சிறை பிடித்து மாணவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் - பேரிகை சாலை புனுகன்தொட்டி, சித்தனப்பள்ளி, முத்தாலி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் தினசரி ஒசூா் பகுதிக்கு சென்று வருகின்றனா்.
ஒசூா் பகுதிக்கு செல்ல காலை, மாலை இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்தானது, கடந்த ஒரு மாதமாக சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லையாம். இதனைக் கண்டித்து, பள்ளி மாணவா்கள் புனுகன்தொட்டி கிராமத்தில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற மாணவா்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் போலீஸாா் பேச்சுவாா்த்தைக்கு பிறகு மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.