திருப்பூா் குமரன் நினைவு தினம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், திருப்பூா் குமரனின் 93-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் 59-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் நா.நவரத்தினம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் க.ப.சந்துரு பேசினாா். கூட்டத்தின்போது, மறைந்த இரு தலைவா்களின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், ஹெச்.சுசிலாராணி, க.அருணகிரி உள்ளிட்டோா் செய்தனா்.