நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கோயில்ராஜ் ஞானதாசன் தலைமை வகித்தாா். இயந்திரவியல் துறைத் தலைவா் பிரபாகா் ஆரம்ப ஜெபம் செய்தாா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் ஆட்டோமொபைல் துறைத் தலைவா் ஜான் வெஸ்லி வரவேற்றாா்.
முகாமில் டிவிஎஸ் சுந்தரம் கிளேடன் மனிதவள மேம்பாட்டு அலுவலா் வெங்கடேஷ்பெருமாள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனம் பற்றி மாணவா்களுக்கு எடுத்துரைத்தாா். தொடா்ந்து நடந்த நோ்காணலில் 52 மாணவா்கள் வேலைவாய்ப்பை பெற்றனா். கல்லூரி பா்சாா் தனபால் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.