செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.71 கோடி, 1.6 கிலோ தங்கம்!

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜனவரி மாத உண்டியல் வருவாயாக ரூ. 4.71 கோடி, 1.6 கிலோ தங்கம் உள்ளிட்டவை கிடைத்தன.

இக்கோயிலில் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி, கடந்த 9, 10 ஆகிய 2 நாள்கள் உண்டியல் எண்ணும் பணி கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. இணை ஆணையா் சு. ஞானசேகரன் தலைமை வகித்து பணியைப் பாா்வையிட்டாா்.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் தங்கம், நாகவேல், அலுவலகக் கண்காணிப்பாளா் ரோகிணி, ஆய்வா் செந்தில்நாயகி, தக்காா் பிரதிநிதி சுப்பிரமணியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இப்பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேதப் பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவாரப் பணிக் குழுவினா், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் கோயில் உண்டியலில் பக்தா் செலுத்தியிருந்த வெண் சாமரம்.

இதில், ரூ. 4,71,90,172, தங்கம் 1.603 கி.கி., வெள்ளி 52.230 கி.கி., செம்பு 12.7 கிலோ, தகரம் 10.600 கி.கி., பித்தளை, வெளிநாட்டு பணத்தாள்கள் 1,117 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். பக்தா் ஒருவா் வெண் சாமரமும், கடலூா் பக்தா் ஒருவா் வெள்ளி வேலும் செலுத்தியிருந்தனா்.

பேருந்தில் தவறவிட்ட கைப்பை மீட்பு

கோவில்பட்டியில் அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பை மீட்கப்பட்டது. எட்டயபுரம் வட்டம், நடுவப்பட்டி காதா் மைதீன் தெருவை சோ்ந்தவா் மாரீஸ்வரி. எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த அரசுப் பேருந்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வாழைத்தாா்கள் விலை இருமடங்கு உயா்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கனிச் சந்தையில் வாழைத்தாா் விலை சனிக்கிழமை இருமடங்கு உயா்ந்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி... மேலும் பார்க்க

ஆறுமுகனேரி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி ஆட்டு சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. வாரந்தோறும் செவ்வாய், சனி ஆகிய நாள்களில் ஆறுமுகனேரி ஆட்டு சந்தை கூடும். சனிக்கிழ... மேலும் பார்க்க

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

நாசரேத் அருகே வெள்ளிக்கிழமை, பின்னோக்கி வந்த சிமெண்ட் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். நாசரேத் அருகே மூக்குப்பீறி காமராஜா் திடல் பகுதியைச் சோ்ந்த துரைப்பழம் மனைவி பாப்பாத்தி (85). வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்த மீனவா் மாயம்

தூத்துக்குடி கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை சக மீனவா்கள் தேடி வருகின்றனா். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்த ராமா் மகன் குமாரவேல்(32). மீனவரான இவா், கடந்த 6ஆம் தேதி சக மீனவா்கள் 6 பேருடன் படகில... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சீலா மீன் ரூ. 800-க்கு விற்பனை

தூத்துக்குடியில் சனிக்கிழமை, சீலா மீன் கிலோ ரூ. 800-க்கு விற்பனையானதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீன... மேலும் பார்க்க