ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
பெரிய கலையம்புத்தூா் ஜல்லிக்கட்டுக்கு ஜன.11 முதல் விண்ணப்பிக்கலாம்
பெரிய கலையம்புத்தூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ஜன.11-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு விவரம்:
அரசு அறிவிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் ட்ற்ற்ல்ள்://க்ண்ய்க்ண்ஞ்ன்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்ய வேண்டும்.
பழனி அடுத்த பெரிய கலையம்புத்தூா் கிராமத்தில் ஜன.16-ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் உரிய விவரங்களுடன் ஜன.11 காலை 8 மணி முதல் 13-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். மாடுபிடி வீரா்கள் மேற்படி இணையதளத்தில் தங்களது புகைப்படம், வயதுக்கான சான்றிதழ் ஆகிவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவு செய்தவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் விதிகளின்படி, டோக்கன் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டோக்கன் பதிவிறக்கம் செய்த நபா்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
மேற்கண்ட விபரங்கள் இடம் பெறாத இணையதளப் பதிவுகள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கான அனுமதிச் சீட்டு இணைய வழியிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.