செய்திகள் :

Bigg Boss tamil 8: வெளியேறிய இரண்டு ஆண் போட்டியாளர்கள்! கடைசிக் கட்ட பரபரப்பில் பிக்பாஸ்!

post image

பிக்பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

ரவீந்தர், அர்னவ், சாச்சனா, சுனிதா உள்ளிட்ட 18 பேர் ஆரம்பத்தில் என்ட்ரி ஆன நிலையில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மஞ்சரி, ராயன் உள்ளிட்ட 6 பேர் இணைந்தனர்.

மொத்தம் 26 போட்டியாளர்களில் அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் இதுவரை 18 பேர் வெளியேறி விட்டனர்.

முத்துக்குமரன், அருண், தீபக், சௌந்தர்யா உள்ளிட்ட 8 பேர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் ஒரு சர்ப்ரைஸ்க்காக ஏற்கனவே வெளியேறியிருந்த அர்னவ், ரவீந்தர், சுனிதா உள்ளிட்ட சில முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.

தீபக்
தீபக்

வரும் வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிற சூழலில் யாரெல்லாம் இறுதிச் சுற்றுக்கு நுழைகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடம் அதிகரித்துள்ள நிலையில் யார் எவிக்ட் ஆகிறார்கள் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

தற்போது கிடைத்த தகவலின் படி ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் தீபக், அருண் இருவரும் வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது.

தீபக் டாப் ஐந்து பேரில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறியிருக்கிறார்.

அருணுக்கு கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அவரும் எவிக்ட் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அருண்
அருண்

அருண் வெளியேறிய எபிசோடு இன்றும் தீபக் வெளியேறும் எபிசோடு நாளையும் ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக தற்போது, ஏற்கனவே இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ரயான் தவிர சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருக்கிறார்கள்.

இந்த ஆறு பேரில் யாருக்கு டைட்டில் கிடைக்கும்? உங்க கமெண்டையும் பதிவு செய்யுங்களேன் பிக்பாக் ரசிகர்களே.

Serial Update : `விஷ்ணு பத்தி நான் செளந்தர்யாவுக்கு சொல்லணும்னு அவசியமில்ல; ஏன்னா..!'- ஆயிஷா ஷேரிங்

அறிவிப்பு விரைவிலேயே வரும்!ஜீ தமிழில் ஒளிபரப்பான `கார்த்திகை தீபம்' தொடரின்மூலம் தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமானவர் அர்த்திகா. அந்தத்தொடர் இவருக்கென ஓர் அடையாளத்தைப் பெற்றுதந்தது. இந்நிலையில் தற்போ... மேலும் பார்க்க

BB Tamil 8: "சாச்சனாவுக்கு ஏன் தைரியம் இல்ல..." - ரயான், சாச்சனா மோதல்; என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96 வது நாளுக்கான (ஜனவரி 10) மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8: ரொம்ப ஓவரா பண்றீங்க, நீங்க பண்றத நான் இங்க சொல்லட்டா? - தீபக்கை சாடிய வர்ஷினி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 95: `வந்தாச்சு எண்டு' இறங்கி அடித்த சுனிதா - கலங்கி அழுத சவுந்தர்யா

புதிதாக வந்தவர்களில் ரவியைத் தவிர வேறு எவரும் எதையும் செய்யவில்லை. ‘கண்ணில் விரலை விட்டு ஆட்டுவேன்’ என்று சபதம் போட்ட அர்னவ், கடந்த முறை மாதிரியே ‘அட்மாஸ்பியர் ஆர்டிட்ஸ்ட்’ போல அங்குமிங்கும் உலவிக் கொ... மேலும் பார்க்க

BB Tamil 8: கூத்துப்பட்டறை பயிற்சி முதல் உளவியல் ஆலோசகர் வரை - சாஷோ ‘பிக் பாஸ்’ ஆன கதை

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் சௌந்தர்யா, அருண், ஜாக்குலின் உள்ளிட்ட 8 பேர் இப்போது களத்தில் இருக்கிறார்கள். யாருக்கு டைட்டில் ... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நான் பண்ணின தப்பு ப்ரெண்ட்ஷிப் வச்சுகிட்டதுதான்" - ஜாக்குலின் சௌந்தர்யா விரிசல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் ப... மேலும் பார்க்க