செய்திகள் :

BB Tamil 8 Day 95: `வந்தாச்சு எண்டு' இறங்கி அடித்த சுனிதா - கலங்கி அழுத சவுந்தர்யா

post image
புதிதாக வந்தவர்களில் ரவியைத் தவிர வேறு எவரும் எதையும் செய்யவில்லை. ‘கண்ணில் விரலை விட்டு ஆட்டுவேன்’ என்று சபதம் போட்ட அர்னவ், கடந்த முறை மாதிரியே ‘அட்மாஸ்பியர் ஆர்டிட்ஸ்ட்’ போல அங்குமிங்கும் உலவிக் கொண்டிருக்கிறார். தர்ஷாவையெல்லாம் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆக மொத்தம் ‘புதிய’ போட்டியாளர்களால் எவ்வித உபயோகமும் இல்லை.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 95

மார்னிங் ஆக்டிவிட்டி. டாப் 8 அணியும் சேலன்ஞ் 8 அணியும் ‘எந்த இரண்டு பேரை ரீப்ளேஸ் செய்யலாம்?’ என்று சொல்ல வேண்டும். முதலில் வந்தது டாப் 8 அணி. இதில் ரவிக்கு பலமான ஆதரவு இருந்தது. அவர் வீட்டில் இருந்தால் ஆட்டம் சுவாரசியமாகும் என்று பெரும்பான்மையோர் சொன்னது உண்மை. அவரைத் தாண்டி சிவாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்தது ஆச்சரியம். சாச்சனாவிற்கும் சில வாக்குகள் கிடைத்தன. வர்ஷினியின் பெயரைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார் முத்து. ரியாவின் பெயரை விஷாலும் ஜாக்குலினும் சொல்ல ‘ஹப்பாடா’ என்று கும்பிட்டார் ரியா.

அடுத்ததாக சேலன்ஞ் 8 அணி. இதில் சுனிதா கொளுத்திப் போட்ட பட்டாசு, சவுந்தர்யாவின் கோட்டையை அட்டகாசமாக தகர்த்தது. ‘மத்தவங்க வீட்டுக்குள்ள ஒரு ஆட்டம் ஆடறாங்கன்னா, சவுந்தர்யா வெளில இருந்து ஆடறாங்க. Manipulation.” என்று இறங்கி அடித்தார். ‘தானாக சேர்ந்த கூட்டத்திற்கும்’, காசு கொடுத்து சேர்க்கிற கூட்டத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. பின்னது உடனே காணாமல் போய் விடும். சவுந்தர்யாவிற்கு இரண்டுமே இருக்கிறது.

‘கஷ்டப்படற பொண்ணுன்னு முதல்ல நெனச்சேன். ஆனா இல்லை’ என்று சுனிதா சொன்னதெல்லாம் அநாவசியமான விவரம். இந்தப் பாயிண்ட்தான் சவுந்தர்யாவை மிகவும் புண்படுத்தியது போல. அப்போதைக்கு முகத்தை பிளாங்காக வைத்திருந்தாலும் பிறகு கதறி அழுது தீர்த்தார்.

இறங்கி அடித்த சுனிதா - கலங்கி அழுத சவுந்தர்யா

சேலன்ஞ் அணி ரீப்ளேஸ் செய்ய விரும்பியதில், சவுந்தர்யாவைத் தாண்டி ஜாக்குலினுக்கு பலத்த சேதாரம் ஏற்பட்டது. விஷாலுக்கும் சரமாாரியான அடி. ‘ஜால்ராஸ்’ என்கிற வார்த்தைதான் எதிரிகளை டிரிக்கர் செய்யும் என்று கணக்கு போட்டிருக்கும் அர்னவ் அதையே தொடர்ந்து உச்சரிக்கிறார். ‘தீபக்’ என்று தவறுதலாக சொல்ல சபையை சிரிக்க வைத்த அர்னவ், யாரை ரீப்ளேஸ் செய்ய விரும்பியிருப்பார் என்பதை எளிதில் யூகிக்கலாம். அருண் மற்றும் விஷால். 

சுனிதா அடித்த அடியை அப்போதைக்கு பொறுத்துக் கொண்டாலும் பிறகு மனவலி காரணமாக அழுத சவுந்தர்யா, பிக் பாஸிடம் ‘உள்ளே கூப்பிடுங்க. பேசணும்’ என்று முறையிட்டார். ‘இத்தனை நாள் ஸ்ட்ராங்கா இருந்தேன். இத்தனை நாள் இருந்ததுக்கு இதுதான் காரணம்ன்னு சொல்றாங்க. என்னால முடியல” என்று தேம்பித் தேம்பி அழ பவித்ராவும் ஜாக்குலினும் சமாதானப்படுத்தினார்கள். ‘மக்களே.. இதையெல்லாம் நம்பாதீங்க. நாங்க வெளில இருந்து பார்த்துட்டு வந்திருக்கோம். இது நடிப்புங்க. அனுதாப ஓட்டுக்காக. கண்ணீருல மயங்கிடாதீங்க’ என்று வர்ஷினியும் சாச்சனாவும் கேமிரா முன்பு முறையிட்டு சவுண்டு ரசிகர்களின் வெறுப்பிற்கு ஆளாகினார்கள். 

சவுந்தர்யாவை உள்ளே அழைத்த பிக் பாஸ் ‘ம்.. என்ன..?” என்கிற மாதிரி அனுதாபமே இல்லாமல் அதிகாரமாக ஆரம்பித்தார். (அவருக்கும் தெரிஞ்சு போச்சோ?!) “அப்பா கிட்ட பேச முடியுமா?” என்று கெஞ்சினார் சவுண்டு. “பேசினா என்ன கிடைக்கும். என்ன சொல்வாரு?” என்று பிக் பாஸ் கேட்க, “ம்.. வந்து தைரியம் கிடைக்கும். வாய்ப்பை நல்லா யூஸ் பண்ணுன்னு சொல்லுவாரு” என்றார் சவுண்டு. (உங்களுக்கே தெரிஞ்ச விஷயத்தை ஏன் அப்பா கிட்ட கேட்கணும்!). 

பிக் பாஸிற்கே ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்ன சவுந்தர்யா


“என்னதாம்மா உன் பிரச்சினை?” என்று பிக் பாஸ் விசாரணையைத் துவங்க “கண்டமேனிக்கு பேசறாங்க பிக் பாஸ். வெறும் ரியாக்ஷன்ஸ் மட்டும்தான் இருக்குன்றாங்க. நாலு பேரு சொன்னாங்க” என்றார். (ஊருன்னா நாலு போ் நாலு விதமாத்தாம் பேசுவாங்க!)  அரவணைப்பை எதிர்பார்த்து சவுந்தர்யா புலம்ப ஆரம்பிக்க “அவங்க உண்மையைத்தானே சொல்றாங்க” என்று பிக் பாஸ் ஜொ்க் தந்ததில் அழுகை டக்கென்று நின்று சவுண்டு ஸ்தம்பித்துப் போனார். “நீங்கதானே டாப் 8-ல இருக்கீங்க. புத்திசாலித்தனம் இருக்கு. தைரியம் இருக்கு. பாட்டு இருக்கு.. ஃபைட்டு இருக்கு” என்று அந்தக் கிண்டலையே பாசிட்டிவ்வாக மாற்றி பிக் பாஸ் பேச ஆரம்பிக்க சவுண்டின் முகத்தில் புன்னகை மலரத் துவங்கியது. 

“நீங்க பண்றதெல்லாம் ஆர்கானிக்தானே. பொய் இல்லல்ல. அப்புறம் என்ன.. போய் நல்லா விளையாடுங்க. Am  proud of you” என்று பிக் பாஸ் சொல்ல, புத்தாண்டு வாழ்த்து சொன்னது மாதிரி ‘same to you’ என்று சவுந்தர்யா சொன்னது ஹைலைட் காமெடி. சவுந்தர்யாவே பெருமைப்படும் அளவிற்கு செயல்படும் பிக் பாஸிற்கு வாழ்த்துகள். ‘அழுத பிள்ளை சிரிச்சுதாம், ஆவின் பாலை குடிச்சுதாம்’ என்கிற மாதிரி அழுகை மறைந்து மலர்ச்சியான முகத்துடன் வெளியே வந்தார் சவுண்டு. அவரது அழுகையைப் பார்த்து துயரம் காரணமாக அன்றிரவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கப் போகும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை நினைத்தாவது சவுண்டு இப்படி அழாமல் இருக்கலாம். 

ரவி கொளுத்திப் போடும் புஸ்வாணங்கள்

ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது. ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு விஷால் ஆடியது நன்றாக இருந்தது. பெட்ரூமின் தனிமையில் சாச்சனா கை, காலை உதறி உதறிக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘அய்யய்யோ. என்னாச்சு’ என்று பதறினால், அது நடனத்திற்கான ரிகர்சலாம். (சொல்லிட்டு செய்ங்கம்மா.. பதறி வருது!). பிறகு இங்கு ஆடியதே பரவாயில்லை என்கிற அளவிற்கு மேடையில் எக்சர்சைஸ் செய்து சொதப்பினார் சாச்சும்மா. 

“கோவா கேங் நட்பு உண்மையா, பொய்யா.. கேமிற்காக சேர்ந்த கூட்டமா, தானா சேர்ந்த கூட்டமா.. உண்மையான நட்பா இருந்தா விஜய்சேதுபதி சொன்னவுடனே ஏன் பிச்சுக்கணும்.. கேமை பாதிக்காத அளவிற்கு விளையாடுங்கன்னுதானே அவரு சொன்னாரு.. அதுக்காக பிரெண்டா இருக்கக்கூடாதுன்னு அர்த்தமில்லையே?’.. என்றெல்லாம் ஜாக்குலினிடம் கொளுத்திப் போட்டார் ரவி. அவர்தான் டிரிக்கர் செய்கிறார் என்று தெரிந்தும் உடனடியாக ரியாக்ட் ஆகிக் கொண்டிருந்தார் ஜாக். “இது கேமை பாதிக்குதுன்னு தெரிஞ்சவுடன் விலகிட்டேன்” என்றார் சவுந்தர்யா. 

“முத்துவும் தீபக்கும் சேஃபா ஆடறாங்க. உங்களுக்கு இது தெரியுமா.. ஆனா ஏன் தீபக்கை விட்டுடறீங்க ஏன் அவரு ஃபோகஸ் ஆகலை?” என்று அடுத்த பட்டாசு ரவீந்திரடமிருந்து கிளம்பி வந்தது. ரவியின் தந்திரத்தை புரிந்து கொண்ட ஜாக், டாப் 8 அணியிடரிடம் சென்று ‘பார்த்து.. சூதானமா இருங்க’ என்று வரிசையாக எச்சரித்தார். 

‘அப்படிப் போடு’ பாடல் ஒலிக்க ‘அய்யோ.. எனக்கா..’ என்று பதறி ஓடினார் சவுந்தர்யா. கூடவே சுனிதாவும் மேடையேற இருவரும் இறங்கி குத்தி ஆடினார்கள். அனுஷ்காவாக வர்ஷினியை கற்பனை செய்ய மனோதிடம் வேண்டும் என்றாலும் ‘காதல் வந்தாலே’ பாடலுக்கு அருணுடன் இணைந்து அவர் ஆடியது நன்று. 

கப்பு கழுவாத சாச்சனா, கப்பு எப்படி ஜெயிப்பார்?

மூன்றாவது முறை வாய்ப்பு கிடைத்தாலும் சாச்சனா அதை பயன்படுத்திக் கொள்ள மாட்டார் என்று தெரிகிறது. ‘எப்போ வேணா அனுப்புங்க.. போறேன்.. என்ன இப்ப?’ என்கிற மாதிரியே இருக்கிறார். காலையில் வைத்த காஃபி கோப்பையை பல முறை நினைவுப்படுத்தியும் மாலை வரை  சாச்சனா கழுவாததால், ‘என்னங்க. இப்படிப் பண்றீங்க.. எத்தனை முறைதான் சொல்றது?’ என்று ரயான் சலித்துக் கொள்ள ‘வருவாங்க. வருவாங்க.. போங்க’ என்று அலட்சியமாக சொன்னார் சாச்சனா. ஒரு சிறிய வேலையைக் கூட செய்ய சுணக்கம் காட்டும் பிக் பாஸ் ஆட்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் சொந்த வீட்டில் எப்படி இருப்பார்கள்?


பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பேசிக் கொண்டே சாச்சனா விலகிச் செல்ல  “பேசிட்டு இருக்கும் போதே போறீங்களே.. இதுதான் மேனர்ஸா?” என்று ரயான் சரியாக கேட்டார். “இப்ப என்ன பிரச்சினை.. கழுவியாச்சு.. துடைச்சாச்சு.. விடுங்கஜி.. தலைவலிக்குஜி” என்று டுமாரு (முத்து) வந்து சமாதானம் செய்து வைத்தார். ஏனெனில் மேட்டர் சாச்சனா தொடர்பானது என்பதால் போல. 

‘படையப்பா’ படத்திலிருந்து ‘மின்சார பூவே’ பாடல் ஒலிக்க சட்டென்று தீபக் எழுந்து ஓட ‘இது என் பாட்டா..’ என்று நீலாம்பரியான சாச்சனா குழம்பினார். சற்று முன் போட்ட சண்டை காரணமாக அப்செட் போல. பிறகு இவரும் எழுந்து சென்று தத்தக்கா பித்தக்கா என்று ஆடினார். நடனம் வராவிட்டாலும் ரஜினியின் பாடி லேங்வேஜை வைத்து நன்றாக சமாளித்தார் தீபக். பிறகு ஒலித்த பாடலுக்கு ரவி அமர்ந்தபடியே நடனமாட கூட உதவி செய்தார் விஷால். 

மிட் வீக் எவிக்ஷன் இருக்கா, இல்லையா?

பிறகு ஒரு பெருங்காய விளம்பரம். ரவியும் பவித்ராவும் நீதிபதிகளாக இருக்க, வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து பெருங்காயத்தை மையமாக வைத்து திரவங்கள் தயார் செய்தார்கள். இதற்காக  லேப் குடுவைகள் மாதிரி என்னென்னமோ சமாச்சாரங்கள் வைக்கப்பட்டிருந்தன. டீடாக்ஸ் என்று என்னெ்னமோ சொல்லி தங்களின் திரவங்களை சுவை பார்க்கத் தந்து நீதிபதிகளை இம்பரஸ் செய்ய முயன்றார்கள். ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் டாப் 8 அணி வெற்றி பெற்றதாக ரவி அறிவிக்க “அதெப்படி முடிவு பண்ணீங்க?” என்று சண்டைக்கு வந்தார் சுனிதா. 

“நல்ல தமிழில் விளக்கிச் சொன்னதை’ ஒரு பாயிண்ட்டாக ரவி சொல்லவும் ‘அப்ப முத்து மாதிரி நல்லா தமிழ் பேச தெரிஞ்சிருக்கணுமா?” என்பது சுனிதாவின் கேள்வி. “தமிழ் என்றல்ல. ஆங்கிலமாக இருந்தால் கூட ஓகேதான். பிரசண்டேஷன் செய்த விதம்’ என்று திறமையாக சமாளித்தார் ரவி. “நீங்க வேணும்ன்ட்டே பண்ண மாதிரி தெரிஞ்சது. அந்த டீம்ல உங்களோட செல்லப் பிள்ளைங்க இருக்காங்க” என்று முகத்திற்கு நேராகவே புகார் சொன்னார் தர்ஷா. 

“நாங்களும் எவ்வளவோ தோத்திருக்கோம். கம்முனு போயிடுவோம். ஜட்ஜட்ஸை இவ்வளவு தூரம் நோண்டி கேள்வி கேட்டதில்லை” என்றார் ரயான். பெருங்காய விளம்பரம், சண்டையாகி மண்டை உடைந்து ‘பெரும் காயமாக’ ஆகி விடாமல் (இதெல்லாம் எந்தக் காலத்து ஜோக்கு சார்?!)  ஒரு மாதிரி ஓய்ந்தது.  இரவு. கிச்சன் ஏரியாவிற்கும் முட்டை என்கிற வஸ்துவிற்கும் எப்போதுமே ஆகாது. ஜாக்கிற்கும் சவுந்தர்யாவிற்கும் முட்டை சமைப்பது தொடர்பாக பிரச்சினை எழுந்து இருவரும் பலத்த முணுமுணுப்புகளின் மூலம் வாதிட்டுக் கொண்டார்கள்.

முத்து, தீபக்கைத் தவிர வேறு எவருமே தங்களின் காரெக்டரில் இல்லாமல் இந்த டாஸ்க்கை அலட்சியமாக கையாண்டார்கள். மொத்தத்தில் சேலன்ஞ் 8 அணியால் வீட்டிற்குள் எந்தத் திருப்பத்தையும் உண்டாக்க முடியவில்லை. வாரக் கடைசியே வரப்போகிறது. மிட் வீ்க் எவிக்ஷன் என்னவாயிற்று? 

BB Tamil 8: ரொம்ப ஓவரா பண்றீங்க, நீங்க பண்றத நான் இங்க சொல்லட்டா? - தீபக்கை சாடிய வர்ஷினி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதி... மேலும் பார்க்க

BB Tamil 8: கூத்துப்பட்டறை பயிற்சி முதல் உளவியல் ஆலோசகர் வரை - சாஷோ ‘பிக் பாஸ்’ ஆன கதை

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் சௌந்தர்யா, அருண், ஜாக்குலின் உள்ளிட்ட 8 பேர் இப்போது களத்தில் இருக்கிறார்கள். யாருக்கு டைட்டில் ... மேலும் பார்க்க

BB Tamil 8: ``நான் பண்ணின தப்பு ப்ரெண்ட்ஷிப் வச்சுகிட்டதுதான்" - ஜாக்குலின் சௌந்தர்யா விரிசல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் ப... மேலும் பார்க்க

BB Tamil 8: `Manipulate-னா என்னானு இவங்களாலதான்...' குற்றச்சாட்டும் சுனிதா - கதறி அழும் சவுந்தர்யா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான மூன்றாவது புரோமோவும் வெளியாகிவிட்டது.இறுதிக்கட்டத்தில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந... மேலும் பார்க்க

Baakiyalakshmi : `கோபியின் அன்புக்கு போட்டாப் போட்டி; ஆனால் கோபி ஏங்குவது..?’

பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. கோபி - பாக்யா - ராதிகா இவர்களுக்குள் இருந்த மனக்கசப்பு மாறி ஓரளவுக்கு புரிதல் ஏற்பட்டுள்ளது. ராதிகாவின் சூழலை பாக்யா புரிந்து கொண்டார். பாக்யா... மேலும் பார்க்க

BB Tamil 8 :`அப்படி போடு...' - பாடலுக்கு ஆவேசமாக நடனமாடும் சவுந்தர்யா - சுனிதா - வெல்லப்போவது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 95-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான... மேலும் பார்க்க