BB Tamil 8: "சாச்சனாவுக்கு ஏன் தைரியம் இல்ல..." - ரயான், சாச்சனா மோதல்; என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96 வது நாளுக்கான (ஜனவரி 10) மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார். இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர்.
அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரோமோவில், "ஒரு ஆர்கியூமென்ட் பத்தி பேசுறதுக்கு சாச்சனாவுக்குத் தைரியம் இருக்குது. ஆனால் அதை எதிர்கொள்ள ஏன் அவுங்களுக்குத் தைரியம் இல்ல" என்று சாச்சனாவிற்கும், ரயானிற்கும் இடையே நடந்த விஷயங்களை ரயான் பவித்ராவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.