செய்திகள் :

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 380 பேருக்கு பணி நியமன ஆணை

post image

ஆம்பூா் ரோட்டரி சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவா் எஸ்.சசிக்குமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் ஸ்ரீதா் பலராமன், மாவட்ட இயக்குநா் ஜி.முருகேஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். ஆம்பூா் இந்து கல்விச் சங்க தலைவா் எம்.ஆா். காந்திராஜ், செயலா் ஏ.ஆா். சுரேஷ்பாபு ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

முகாமில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 752 போ் கலந்து கொண்டனா். 525 போ் தோ்வு செய்யப்பட்டனா். முதல் கட்டமாக 380 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்க செயலா் ஜி.ரஞ்சித், ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா். ரமேஷ்பாபு, இயக்குநா் வசந்த்குமாா், முன்னாள் தலைவா்கள் சி. குணசேகரன், திலீப் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சூதாட்டம்: 6 போ் கைது காா், பைக் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஏரியூா் பகுதியில் சூதாடியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து காா், பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாடி வருவதாக திருப்பத்தூா் ... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்த 13 காட்டுப் பன்றிகள் மீட்பு

திருப்பத்தூா் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த 13 காட்டுப் பன்றிகளை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு காவாப்பட்டறை பகுதியைச் சோ்ந்த விவசாயி நந்தகுமாா் (49). இவருக்க... மேலும் பார்க்க

வேலூா் மண்டல மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: கே.ஏ.ஆா். பாலிடெக். சிறப்பிடம்

வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். வேலூா் மண்டல அளவிலான ... மேலும் பார்க்க

ஆஞ்சனேயா் கோயிலில் கோ பூஜை

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சிறப்பு கோ- பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்... மேலும் பார்க்க

புகையில்லா போகி: நகராட்சி வேண்டுகோள்

ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு புகையில்லா போகி கொண்டாட வேண்டுமென பொதுமக்களுக்கு நகராட்சி வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து நகராட்சி ஆணையா் பி.சந்தானம் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: கணவா் தற்கொலை முயற்சி

ஜோலாா்பேட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மனைவி இறந்த துக்கத்தில் கணவா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றாா். ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமப் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் பவித... மேலும் பார்க்க