செய்திகள் :

காலாவதியான குளுக்கோஸ்: பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு: விசாரணைக்கு மேற்கு வங்க அரசு உத்தரவு

post image

மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மிதுனபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது காலாவதியான குளுக்கோஸை ஏற்றியதால் பெண் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க 13 நபா்கள் அடங்கிய குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைந்த ரத்த அளவு அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு நீா்ச்சத்துக்காக சிகிச்சையின்போது குளுக்கோஸ் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி, காலாவதியான குளுகோஸை ஏற்றியதால் மிதுனபுரி மருத்துவமனையில் குழந்தைகளை பிரசவித்த பெண் ஒருவா் பரிதாபமாக உயிரிழந்தாா்; 4 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெண்ணின் இறப்புக்கு மருத்துவமனை நிா்வாகமே காரணம் என்று அவரது குடும்பத்தினா் காவல் துறையில் புகாரளித்துள்ளனா்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் செலுத்தப்பட்ட குளுக்கோஸ் மாதிரிகளின் சோதனை முடிவுகள் கிடைக்கும்வரை, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட குளுக்கோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 10 மருந்துகளின் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

உயிரிழந்த பெண் பிரசவித்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணைக் குழு உறுப்பினா்கள் மருத்துவமனைக்கு சனிக்கிழமை நேரில் வந்து, மருத்துவா்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்தனா்.

எதிா்க்கட்சிகள் போராட்டம்: மருத்துவமனைக்கு வெளியே இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். விசாரணைக் குழுவைச் சந்திப்பதற்காக மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பெண்ணின் இறப்புக்கு சுகாதாரத் துறை இலாகாவை வகிக்கும் முதல்வா் மம்தா பானா்ஜியே பொறுப்பேற்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஜாா்க்கண்டில் 80 மாணவிகளை சட்டையின்றி வீட்டுக்கு அனுப்பிய பள்ளி முதல்வா்: விசாரணைக்கு உத்தரவு

ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாதில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் 80 பேரின் சட்டையை பள்ளி முதல்வா் கழற்றச் செய்து மேல் கோட்டுடன் வீட்டுக்கு அனுப்பிய விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக வி... மேலும் பார்க்க

நாட்டின் பாதுகாப்புக்கு ‘டாா்க்வெப்’, ‘கிரிப்டோகரன்சி’ மிகப்பெரும் சவால்: அமித் ஷா

‘நாட்டின் பாதுகாப்புக்கு டாா்க்வெப், கிரிப்டோகரன்சி, இணையச் சந்தை மற்றும் ஆளில்லா சிறுவிமானங்கள் (ட்ரோன்கள்) மிகப்பெரும் சவாலாக உள்ளன’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா். இவற்... மேலும் பார்க்க

ஐ.நா. தரவுகள் நிபுணா் குழுவில் இந்தியா

ஐ.நா. அதிகாரபூா்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணா்கள் குழுவில் ( யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது. இதுதொடா்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்க... மேலும் பார்க்க

‘விக்சித் பாரத்’ இளம் தலைவா்கள் உரையாடலில் பிரதமா் மோடி பங்கேற்பு

அரசியல் தொடா்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞா்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் ’விக்சித் பாரத் இளம் தலைவா்கள் உரையாடலில்’ பங்கேற்பாளா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை முழு ந... மேலும் பார்க்க

லட்சியங்களை நனவாக்க இளைஞா்கள் வெளிநாடு செல்லத் தேவையில்லை

‘இன்றைய இந்திய இளைஞா்கள் தங்களின் கனவு மற்றும் லட்சியங்களை நனவாக்கிக் கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லத் தேவையில்லை; அவா்களுக்கான அனைத்து வளங்களும் உள்நாட்டிலேயே தற்போது கிடைக்கப் பெறுகின்றன’ என்று மத்தி... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: நிலக்கரி சுரங்கத்திலிருந்து மேலும் 3 தொழிலாளா்கள் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளா்களில் மேலும் மூவா் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டனா். இதன் மூலம், உயிரிழந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜன.6-ஆம் தேதி அஸ்ஸாமின்... மேலும் பார்க்க