ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
புகையில்லா போகி: நகராட்சி வேண்டுகோள்
ஆம்பூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு புகையில்லா போகி கொண்டாட வேண்டுமென பொதுமக்களுக்கு நகராட்சி வேண்டுகோள் விடுத்தது.
இது குறித்து நகராட்சி ஆணையா் பி.சந்தானம் வெள்ளிக்கிழமை கூறியது:
அரசின் உத்தரவுப்படி புகையில்லா போகி கொண்டாட வேண்டும். அந்த நேரத்தில் தெருக்கள், கால்வாய், பொது இடங்களில் குப்பைகளை போடக் கூடாது. குப்பைகளையும் எரிக்கக் கூடாது. குப்பைகளை பசுமை சுழற்சி மையங்களில் ஒப்படைக்கலாம். நகராட்சிப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள், டயா், பழைய துணி உள்ளிட்ட குப்பைகளை எரிக்கக் கூடாது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.