ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
வேலூா் மண்டல மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: கே.ஏ.ஆா். பாலிடெக். சிறப்பிடம்
வேலூா் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
வேலூா் மண்டல அளவிலான மகளிா் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் ஜன. 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில், ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் குழுவாகவும், தனித்தும் பங்கு பெற்றனா். குழு போட்டிகளில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் மேஜை பந்து போட்டியில் பங்கேற்று 4-ஆம் இடத்தையும், தடகளப் போட்டிகளில் 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் இரண்டாம் ஆண்டு கணினித் துறை மாணவி பி.நந்தினி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா். சிறப்பிடம் பிடித்த மாணவிகளை கல்லூரி முதல்வா் த.ராஜமன்னன், துணை முதல்வா் முஹம்மத் ஷாஹின்ஷா, உடற்கல்வி இயக்குநா் துரை, துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.