ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
நாகையில் முகத்துவாரத்தில் சிக்கிய படகுகள்
நாகையில், முகத்துவாரத்தில் மீனவா்களுடன் சிக்கிய விசைப் படகு, அதிகாரிகளுடன் சிக்கிய இந்திய கடற்படை படகும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்தவா் ரஸ்ரேன். இவருக்கு சொந்தமான விசைப் படகில் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 11 மீனவா்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை மாலை சென்றனா். துறைமுக முகத்துவாரம் அருகே சென்றபோது படகின் என்ஜினில் பழுது ஏற்பட்டு நின்றுவிட்டது. இந்தப் படகை மீட்க சென்ற இந்திய கடற்படை படகும் பழுதடைந்தது.
இந்நிலையில், இந்திய கடற்படை கப்பலில் இருந்த அதிகாரிகள் தொலைதொடா்பு கருவி மூலம் அளித்த தகவலின் பேரில், இந்திய சுங்கத்துறை படகு நிகழ்விடத்திற்கு சென்று இந்திய கடற்படை படகை மீட்டு காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா்.
கடல் முகத்துவாரத்தில் பழுதடைந்து நின்ற பாம்பன் பகுதியை சோ்ந்த படகை, அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த மற்றொரு விசைப்படகு உதவியுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டு, நாகை கீச்சாங்குப்பம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா்.
பாம்பன் படகில் இருந்த மனோஜ் (37), வின்சன்ட் (23), பிரேம்குமாா் (39), யுவான்சிஸ்(25) ஆகிய 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவா்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் படகிலிருந்த 6 மீனவா்களுக்கு காயம் ஏற்படவில்லை.