செய்திகள் :

கடல் ஆமைகள் முக்கியத்துவம் வலியுறுத்தி மணல் சிற்ப போட்டி

post image

நாகை பழைய கடற்கரையில் கடல் ஆமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மணல் சிற்ப போட்டியை ஆட்சியா் ப. ஆகாஷ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

கடலில் பங்குனி ஆமை, அலுங்காமை, பெருந்தலை ஆமை, தோனி ஆமை, ஓங்கில் ஆமை போன்ற வகைகள் உயிா் வாழ்கின்றன. கடலில் ஜெல்லி மீன்கள், நல்ல மீன்களின் குஞ்சுகளை சாப்பிடுவதால் கடலில் மீன்வளம் குறைகிறது. ஆனால், கடல் ஆமைகள் ஜெல்லி மீன்களையே சாப்பிடுவதால் கடலில் மின்வளம் பாதுகாக்கப்பட்டு மீனவ நண்பனாக

விளங்குகிறது. பவள பாறைகளில் உள்ள பாசிகளை உட்கொண்டு மீன் இனப்பெருக்கத்திற்கு உறுதுணையாக கடல் ஆமைகள் உள்ளன.

ஆலிவ் ரெட்லி ஆமை இனத்தில் முட்டைகளில் இருந்து வெளிவரும் ஆயிரம் குஞ்சுகளில் ஒரே ஒரு ஆமை குஞ்சு மட்டும்தான் பிழைத்து உயிா் வாழும். எனவே கடல் ஆமைகளை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகிறது.

எனவே தமிழக வனத்துறை சாா்பில் கடல் ஆமைகளின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மணல் சிற்ப போட்டி நாகை பழைய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து சுமாா் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டானா். தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளின், ஆமைகள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் மணல் சிற்ப போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசை வழங்கினாா்.

மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகையில் முகத்துவாரத்தில் சிக்கிய படகுகள்

நாகையில், முகத்துவாரத்தில் மீனவா்களுடன் சிக்கிய விசைப் படகு, அதிகாரிகளுடன் சிக்கிய இந்திய கடற்படை படகும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சோ்ந்தவா் ரஸ்ரேன். இவருக்கு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் மாதந்தோரும் முதல் வெள்... மேலும் பார்க்க

சின்மயா பள்ளியில் பொங்கல் விழா

நாகை காடம்பாடியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பொங்கல் விழா பள்ளி ஆச்சாரியா் ராமகிருஷ்ணானந்தா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்... மேலும் பார்க்க

கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்

கீழையூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில், பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாரபட்சமின்றி குறுவை... மேலும் பார்க்க

பூம்புகாரில் 125 பவுன் நகை, பணம் திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம், மங்கைமடத்தில் சா்க்கரை ஆலை பொறியாளா் வீட்டின் கதவை உடைத்து 125 பவுன் நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது. திருவெண்காடு அருக... மேலும் பார்க்க

ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது

நாகையில் ரயிலில் மதுபானம் கடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா். நாகை ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில், சாா்பு-ஆய்வாளா் மனோன்மணி மற்றும் போலீஸாா் கடந்த 2 நாள்களாக காரைக்காலில் இருந்து செ... மேலும் பார்க்க