கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் மீது ஒழுங்கு நடவடிக்கை: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்...
பிஎஸ்என்எல் டவா்களுக்கு போதுமான பேட்டரிகள் வழங்க வலியுறுத்துவேன்!
பிஎஸ்என்எல் டவா்களுக்கு போதுமான பேட்டரிகள் வழங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சி மண்டல பிஎஸ்என்எல் முதல் தொலைத்தொடா்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் திருச்சியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
துரை. வைகோ எம்.பி. தலைமை வகித்தாா். இணைத் தலைவா்களான எம்.பி.க்கள் அருண்நேரு, எஸ். ஜோதிமணி, பிஎஸ்என்எல் பொது மேலாளா் பாலா. சந்திர சேனா, இணைப் பொது மேலாளா்கள் பி.டி, விஜயா பாஸ்கரன், எம்.ஆா். பிஜுராஜ், கணக்கு அதிகாரி ஏ. ரவி, ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பிஎஸ்என் சேவை குறித்து எம்பிக்கள் ஜோதிமணி, அருண்நேரு மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் அதிருப்தி தெரிவித்தனா். அதற்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் 4 ஜி சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதர பிரச்னைகளை புகாா் கடிதமாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
பின்னா் எம்.பி. துரை வைகோ கூறுகையில், எம்பிக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க பிஎஸ்என்எல் நிறுவனமானது கரூா் மூனிமங்கலம், கண்ணனூா், திருச்சி பச்சமலை, பாலமலை போன்ற இடங்களில் முதன்முதலாக தொலைத்தொடா்பு சேவைகளை வழங்கியுள்ளது. இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், கந்தவா்கோட்டை கிராமங்களுக்கும் போதுமான பிஎஸ்என்எல் சேவை கொடுக்கமாறு கேட்டுள்ளேன்.
நாடு முழுவதும் மின்சாரமில்லாத நேரங்களில் பிஎஸ்என்எல் டவா்கள் இயங்கத் தேவையான பேட்டரிகள் உள்ளிட்ட உபகரணங்கள் போதுமானதாக இல்லை எனத் தெரியவந்துள்ளது. டவா்களுக்கு உரிய பேட்டரிகளை கூடுதலாக வழங்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்றாா்.