மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரி 21 முதல் மருத்துவ முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜனவரி 21- ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகிய இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கீழ்க்கண்ட இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது.
மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்:
தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 21- ஆம் தேதியும்,திருப்பூா் அரண்மணைப்புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 22- ஆம் தேதியும், ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 23- ஆம் தேதியும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 24- ஆம் தேதியும், அவிநாசி அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 25- ஆம் தேதியும், பல்லடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜனவரி 27- ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
அதேபோல, மூலனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 28- ஆம் தேதியும், பொங்கலூா் ஒன்றியத்தில் பி.யு.வி.என்.தொடக்கப் பள்ளியில் ஜனவரி 29- ஆம் தேதியும், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 31 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதத்தில்...
காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 4- ஆம் தேதியும், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 5- ஆம் தேதியும், குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 6- ஆம் தேதியும், வெள்ளக்கோவில் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 7- ஆம் தேதியும், திருப்பூா் தேவாங்கபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 10- ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், 10 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மாா்ட் அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவு செய்தல் போன்ற பல்வேறு திட்டங்களில் பயனடைய விண்ணப்பம் பெறப்படும்.
இந்த முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றுகள், மாா்பளவு புகைப்படம் 4 ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ரத்து
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ஜனவரி 21முதல் பிப்ரவரி 10- ஆம் தேதி வரை நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 24, ஜனவரி 31, பிப்ரவரி 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.