நாளைய மின்தடை: பூமலூா்
பூமலூா் துணை மின் நிலையத்தில் உள்ள 110 கேவி உயா் மின்பாதையில் கோபுர கம்பி இழுக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் (பொறுப்பு) சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
பள்ளிபாளையம் கருப்பராயன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சாந்தி கியா்ஸ் செல்லும் சாலை, அரசு மருத்துவமனை மற்றும் சிவசக்தி கிரஷா் வரை உள்ள பகுதிகள்.