செய்திகள் :

மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு ஒரு போதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர்

post image

மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய இரயில்வே அமைச்சர் 10.01.2025 அன்று மதுரை - தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியதாகவும் அதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்ததாக செய்தி வெளிவந்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்தவிதத்திலும் இவ்வாறு தெரிவிக்கவில்லை, மாறாக இத்திட்டத்தை நடைமுறை படுத்தவே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

மதுரை – தூத்துக்குடி (வழி அருப்புக் கோட்டை) புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு இரயில்வே துறையால் நிலத்திட்ட அட்டவணைப்படி 926.68.84 ஹெக்டேர் நில எடுப்பு

செய்து இரயில்வே துறைக்கு ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி) அவர்களிடம் கேட்டுக் கொண்டதில், இத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் (போக்குவரத்துத் துறை) அரசாணை (நிலை) எண்.7, நாள் 24.01.2022, அரசாணை (நிலை) எண்.65, நாள் 25.04.2023 மற்றும் அரசாணை (நிலை) எண்.134, நாள் 22.09.2023 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்காணும் திட்டம் உள்ளிட்ட ஏனைய இரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு 19.08.2024 நாளிட்ட கடிதம் மூலம் தமிழ்நாடு முதல்வர், ஒன்றிய ரயில்வே அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அப்படியொரு கடிதம் எழுதியுள்ள நிலையில்- தமிழ்நாடு அரசு வேண்டாம் என்று கூறி விட்டது என ஒரு ஒன்றிய அமைச்சரே பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இத்திட்டத்திற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு விருதுநகர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களால் 09.08.2024, 04.09.2024, மற்றும் 27.09.2024 ஆகிய நாட்களில் முறையே தென்னக இரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது வரை அதற்கான பதில் ஏதும் பெறப்படவில்லை.

அந்தக் கடித விவரங்களாவது ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா? மேலும், 12.12.2024 நாளிட்ட அரசுக் கடிதம் மூலம் தென்னக இரயில்வே, பொது மேலாளர் அவர்களிடம் தமிழக இரயில்வே திட்டங்கள் குறித்த தற்போதைய நிலை மற்றும் நிதி நிலை அறிக்கையை கேட்டுக்கொள்ளப்பட்டது. இது குறித்து தென்னக இரயில்வே துணைத் தலைமைப் பொறியாளர் தனது கடித நாள் 19.12.2024ல் “மதுரை – தூத்துக்குடி அகல இரயில்பாதை திட்டம் தொடர்பாக மீளவிட்டான் – மேலமருதூர் வரை 18 கி.மீ. அளவில் பணி முடிக்கப்பட்டுவிட்டது” என்றும் “மீதமுள்ள பிரிவுகளில் திட்டம் தொடர்வது தொடர்பாக தென்னக இரயில்வேயால் இக்கருத்துரு குறைந்த சரக்கு வாய்ப்புகள் உள்ளதால் கைவிடப்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கா் உருக்கு ஆலையில் விபத்து: மேலும் 3 சடலங்கள் மீட்பு

இத்திட்டத்தினை கைவிடக்கோரி எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் இரயில்வே துறைக்கு தெரிவிக்கப்படவில்லை, மாறாக இத்திட்டத்தை துரிதப்படுத்தவே தமிழ்நாடு அரசு இதுவரை கோரி வருகிறது. இத்திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டதாக அடிப்படை ஆதாரமற்றது என்பது மட்டுமல்ல- தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணான தகவலை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரே வெளியிடலாமா? தமிழ்நாட்டின் திட்டம் என்றாலே ஒரவஞ்சனையுடன் பார்த்து- புறக்கணிக்கும் மனப்பான்மையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் எண்ணவோட்டம் தமிழ்நாடு மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? ஆகவே முதல்வரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இத்திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென ஒன்றிய இரயில்வே துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் முடிந்ததும் பரந்தூர் செல்கிறார் விஜய்

ஜனவரி 3ஆவது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகள்... மேலும் பார்க்க

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்ட... மேலும் பார்க்க

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள்: ஜன.13-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

பொங்கல் விழாவையொட்டி ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஜன.13ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னையில், தை மாதம... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்ணிக்கப் போவதாக கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையால் ராக்கெட்டில் பறந்த விமான டிக்கெட்!

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை என்பதால், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கட்டுக்கடங்காத கூட்டம் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் நிலையில், விமான டிக்கெட் விலையும் கடுமையாக உயர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும்: வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரு... மேலும் பார்க்க