எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: சேலம் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்து தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்ட புகாரில், அவர் மீது வழக்கு பதிவுசெய்ய ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று(ஜன. 22) தீர்ப்பளித்துள்ளது.
அப்போது, காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.