F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
Maharashtra Train Accident: தீவிபத்து வதந்தியால் வெளியே குதித்த பயணிகள்; ரயில் மோதி 11 பேர் பலியா?
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் அருகே இன்று (ஜனவரி 22) லக்னோவிலிருந்து மும்பை நோக்கி புஸ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் பச்சோரே ரயில் நிலையம் அருகே வந்தபோது ரயிலில் தீப்பிடித்துக்கொண்டதாகப் பயணிகள் மத்தியில் வதந்தி பரவியது. இதனால் சிலர் ரயில் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
ரயிலில் தீப்பிடித்துவிட்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து புஸ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து சில பயணிகள் வெளியில் குதித்தனர். அந்நேரம் பெங்களூருவிலிருந்து டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் புஸ்பக் ரயிலிலிருந்து வெளியில் குதித்த பயணிகள் மீது மோதியது. இதில் பயணிகள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்பு வாகனத்துடன் விரைந்து வந்து காயம் அடைந்த மற்றும் உயிரிழந்த பயணிகளை மீட்டனர்.
இது குறித்து மத்திய ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பயணிகள் மத்தியில் பரவிய தீ விபத்து வதந்தி குறித்து விசாரித்தபோது ரயிலில் ஒரு பெட்டியில் பிரேக் ஜாமாகி அதிலிருந்து தீப்பொறி கிளம்பியதாகத் தெரிகிறது. அதனைப் பார்த்துவிட்டு பயணிகள் தீப்பிடித்துக்கொண்டதாகப் பயந்து ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்துவிட்டனர். அவர்களில் சிலர் பயத்தில் ரயிலிலிருந்து கீழே குதித்தனர். அருகில் உள்ள தண்டவாளத்தில் கர்நாடகா எக்ஸ்பிரஸ் வேகமாக வந்து பயணிகள் மீது மோதிவிட்டது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். ரயில் தண்டவாளம் முழுக்க பயணிகள் உடல் சிதறிக்கிடந்தது. ரயில்வே மீட்பு வாகனத்தின் மூலம் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு 8 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஜல்காவ் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மாநில அமைச்சர் கிரீஷ் மகாஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தேவையான சிகிச்சை கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs