அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
Most Watched Reel: 554 மில்லியன் பார்வைகளைக் கடந்த இன்ஸ்டா ரீல்ஸ் - உலக சாதனை படைத்த கேரள இளைஞர்!
21 வயதான முஹம்மது ரிஸ்வான் (@riswan_freestyle) கேரளாவைச் சேர்ந்தவர். இவர் ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரர் ஆவார். நவம்பர் 2023 அன்று , அவர் ஒரு ரீலை வெளியிட்டபோது, அது மிகவும் வைரலானது. அது தற்போது உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட ரீல்ஸ் ஆக மாறியிருக்கிறது.
கேரளாவின் கால்பந்து Stuntman முகமது ரிஸ்வான் என்பவர், நீர்வீழ்ச்சி ஒன்றில் இரு பாறைகளுக்கு இடையே இருக்கும் சந்தில் சரியாகப் பந்தை உதைக்க, அது மறைந்து விடுகிறது. இந்த ரீல்ஸை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது தற்போது 554 மில்லியன் (55.4 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 8.4 மில்லியன் லைக்குகளையும் இந்த ரீல்ஸ் பெற்று, உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட ரீல்ஸ் என்றும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் மக்கள் தொகையை விட அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது! இந்த ரீல். இந்த மைல்கல்லுக்காக கின்னஸ் உலக சாதனை படைத்து அசத்தியிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய ரிஷ்வான், ``நான் பதிவிட்ட இந்த வீடியோ 10 நிமிடங்களில் 2,00,000 பார்வையாளர்களைப் பெற்று... வீட்டுக்குப் போவதற்குள் 1 மில்லியனை எட்டியது. அப்போதிலிருந்து ரீல் பிரபலம் அடைந்து 92,000 லட்சம் லைக்குகளையும் 42,000 கருத்துக்களையும் வாங்கி குவித்தது. கால்பந்து வீரர்கள், பார்வையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வீடியோவின் படைப்பாற்றல் மற்றும் எளிமையைப் பாராட்டியுள்ளார்கள்." எனக் கூறியிருந்தார்.
கின்னஸ் சாதனை சான்றிதழ் ரிஸ்வானுக்கு வழங்கப்பட்ட பின்னர், அதே நீர்வீழ்ச்சிக்குச் சென்று ஒரு கையில் உலக சாதனை சான்றிதழையும், மற்றொரு கையில் கால்பந்தையும் பிடித்தபடி நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டிருக்கிறார்.