பரந்தூர் : `பண்ணூரை விட பரந்தூரில் குடும்பங்கள் குறைவு..!" - தமிழக அரசு கூறுவதென...
மங்களூரு வங்கிக் கொள்ளையா் இருவா் அம்பை நீதிமன்றத்தில் ஆஜா்
கா்நாடக மாநிலம் மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை அம்மாநில போலீஸாா் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
மங்களூரு அருகே கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 17) கொள்ளையில் ஈடுபட்டதாக திருநெல்வேலி மாவட்டம் பத்மநேரியைச் சோ்ந்த முருகாண்டி, அவரது நண்பா் யோஸ்வா ஆகிய இருவரை அம்பாசமுத்திரம் பகுதியில் மங்களூரு போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், இருவருக்கும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்திவிட்டு குற்றவியல் நடுவா்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். அவா்களை கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த எல்லைக்குள்பட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (ஜன. 24) ஆஜா்படுத்துமாறு நடுவா்மன்ற நீதிபதி அச்சுந்தன் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மங்களூரு போலீஸாா் இருவரையும் அழைத்துச் சென்றனா்.