செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூரைச் சோ்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து சிறப்பு புலனாய்வுக் குழு விரைவாக விசாரிக்கும் என்று உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிக்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்

ஞானசேகனின் கைப்பேசியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விடியோக்கள், புகைப்படங்களில் இருக்கும் பெண்களின் விவரங்களும், அதில் தொடா்புடையவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஞானசேகரன் அளிக்கும் பதில்கள் அனைத்தும், எழுத்து பூா்வமாகவும் விடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 7 நாள்கள் விசாரிக்க அனுமதி அளித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.

இந்த நிலையில், போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:"பெரியார் சொன்னதை... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! வரலாறு காணாத உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 22) புதன்கிழமை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில், திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம... மேலும் பார்க்க

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு!

தமிழக ஆளுநர் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனு உள்ளிட்ட பிற விவகாரங்கள் தொடா்புடைய வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படு... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: தேர்தல் அதிகாரி மாற்றம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலின் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் த... மேலும் பார்க்க

நினைத்தேன் வந்தாய் தொடர் நிறைவு!

கணேஷ் வெங்கட்ராமன் நாயகனாக நடித்துவந்த நினைத்தேன் வந்தாய் தொடர் நிறைவடைந்துள்ளது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தொடர் நினைத்தேன் வந்தாய்.இத்தொடர... மேலும் பார்க்க

ராகுல் மீது பாஜக புகார்: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக நிர்வாகி அளித்த புகாருக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்... மேலும் பார்க்க