மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
BB Tamil 8: `அர்ச்சனா கிட்ட அதை சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தேன்… ஆனா!’ - அருண் எக்ஸ்க்ளுசிவ்
பிக் பாஸ் சீசன் 8 முடிவடைந்திருக்கிறது.
இந்த சீசனின் டைட்டிலை முத்துக்குமரன் வென்றிருக்கிறார். பிக் பாஸ் முடிந்திருக்கும் வேளையில் வீட்டிலிருந்து வெளியேறிய அருண் பிரசாத்தை சந்தித்துப் பிக் பாஸ் தொடர்பாக பல விஷயங்கள் பேசினோம்.
இந்த பிக் பாஸ் பயணம் தொடர்பாக பல விஷயங்களை எடுத்துரைக்க தொடங்கிய அவர், ``பிக் பாஸ் வீட்டுல நான் எவிக்ட் ஆகும்போது மொத்தமாக 8 எட்டு பேர் இருந்தோம். கடைசில இரண்டு நாட்கள் மறுபடியும் வீட்டுக்குள்ள போவேன்னு நினைக்கல. அந்த சமயம் பொங்கல் பண்டிகை வேற, எனக்கு உடம்பும் சரியில்ல. அதுனாலதான் மீண்டும் என்னால வீட்டுக்குள்ள போக முடியல. போக முடியாததை எண்ணி ஃபீல் பண்ணேன். அங்க இருக்கிறவங்களும் என்னை மிஸ் பண்ணினதாக சொன்னாங்க.
நான் சமூக வலைதளப் பக்கங்கள்ல அதிகமாக பார்க்கமாட்டேன். நான் பார்த்த கமென்ட்ஸ்ல எல்லோரும் நான் டீசன்ட்டான கேம் விளையாடியிருக்கேன்னு சொல்றாங்க. என்னை சுற்றி இருக்கிறவங்களுக்கே என்னை இப்போதான் முழுசா பார்த்த ஃபீல் இருக்குனு சொல்றாங்க. நான் ஃப்ரண்ட்ஸ்கூட எப்படி இருப்பேன்னு அப்பா, அம்மாவுக்கு தெரியாது. அம்மா, அப்பாக்கூட எப்படி இருப்பேன்னு ப்ரண்ட்ஸுக்கு தெரியாது. அதை தெரிஞ்சுகிறதுக்கான எல்லா தருணமும் பிக் பாஸ்ல நடந்தது. நான் வெளில எப்படி இருப்பேனோ, அப்படிதான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்தேன். ஒரு ஆண் அழுகக்கூடாதுனு சொல்றாங்க.
அது தப்பான விஷயம். எமோஷன் எல்லோருக்கும் ஒன்னுதான். இந்த பிக் பாஸ் வீடு ஒரு எமோஷனல் ரோலர்கோஸ்டராக இருந்திருக்கு. நான் நானாகதான் இருந்தேன். அதுல குறை, நிறைகள் எது சொன்னாலும் நான் ஏத்துக்கிறேன். முத்துக்குமரன் வெற்றி பெற்றதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம். அதுக்கு அவர் தகுதியானவர். பெரும் உழைப்பைக் கொடுத்திருக்காரு. நான் ஜாக்குலின் டாப் 2ல இருப்பாங்கனு எதிர்பார்த்தேன். ஆனா, பணப்பெட்டி டாஸ்க்ல சரியான விஷயங்கள் அவங்களுக்கு அமையல. 15 வாரமும் நாமினேட் ஆகி பயங்கரமாக விளையாடினாங்க. அவங்க ஃபைனல்ஸ்ல இல்லாதது எனக்கு ஏமாற்றம். இந்த விஷயம் பற்றி நான் ஜாக்குலிங்கிட்டையும் பேசினேன். அவங்க ` நீ என்கூட இருந்திருந்தால் என்னை இன்னும் மோட்டிவேட் பண்ணியிருப்ப'னு சொன்னாங்க.
பணப்பெட்டி நேரத்துல நான் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக ஓடி பணத்தை எடுத்திருப்பேன். நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகிறதுக்கு முன்னாடி `ஆல் தி பெஸ்ட்' சொன்னாங்க. வெளில வந்ததுக்குப் பிறகு `கங்கிராட்ஸ், நல்ல வேலை பண்ணியிருக்க'னு சொன்னாங்க. பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னுடைய ஹார்லி குயினை அறிமுகப்படுத்தின விஷயம் சட்டென நடந்த விஷயம்தான்.
அவங்க கடந்தாண்டு பிக் பாஸ் போகும்போது `இதைப் பற்றி சொல்லாதீங்க. சரியான நேரம் வரும்போது சொல்லிக்கலாம்'னு சொன்னேன். இந்த பிக் பாஸ்ல ப்ரீஸ் டாஸ்க்ல தெரியப்படுத்தின விஷயம் எங்களுக்கு ஆசீர்வாதம்னுதான் நான் நினைக்கிறேன்." எனக் கூறி முடித்துக் கொண்டார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...