அதானி வீட்டு திருமணம்: ரூ. 5,000 கோடி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
கதிர் ஆனந்திடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் விசாரணை
சென்னை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை முன்னிட்டு நேரில் ஆஜரான திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திடம் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் தற்போது வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அமலாக்கத்த்துறை மண்டல அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆஜராகக் கோரி நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 10.30. மணியளவில் நேரடியாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்த திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், விசாரணைக்கு ஆஜரானார்.
கதிர் ஆனந்த்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. காலையில் தொடங்கிய விசாரணை தற்போது வரை நிறைவடையவில்லை. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் விசாரணையில் இருந்து வருகிறார் கதிர் ஆனந்த் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2019 ஆண்டு தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட பணம் விவகாரம், ரூ.13.7 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்தும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.