செய்வினை சந்தேகத்தில் கொலைவெறி தாக்குதல்! 70 வயது மூதாட்டி பலி!
சிவகங்கைக்கு மூன்று திட்டங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!
சிவகங்கை: சிவகங்கைக்கு அடுத்தடுத்து இன்னும் அதிகமாக செய்து தர இருக்கிறோம். அதற்கு அடையாளமாக இந்த விழாவில் மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சிவகங்கை மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாரின்.
அப்போது அவர் பேசியதாவது, முதல் அறிவிப்பாக, இப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் கட்டடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி, அது பழுதடைந்து, இடப்பற்றாக்குறை சூழ்நிலையில் இருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதனால், பல துறைகளின் அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் இயங்கிக்கொண்டு இருப்பதாலும், எல்லா மாவட்ட அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும்!
இரண்டாவது அறிவிப்பு - சிங்கம்புணரி, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் - திருப்பத்தூர் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூர் நகரத்திற்கு 50 கோடி ரூபாய் செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க 30 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
இப்படி, நம்முடைய அரசு, துல்லியமாகவும் – துரிதமாகவும் செயல்பட்டு வருகிறது! அதனால்தான், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன என்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளிவிவரத்துடன் சொல்லி வருகிறேன் என்று கூறியுள்ளார்.