புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
கோயில் அருகே போதைப்பொருள் விற்பனை: தடை கோரிய மனு நிராகரிப்பு!
புது தில்லி: கோயில்களுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொது நல மனுதாரரான அபிமன்யு ஷர்மா, கோயில்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இதனால் வழிபாட்டுத் தலங்களின் புனித தன்மையும், தூய்மையையும் கேடுவதாகவும், அவற்றை பராமரிக்கக் கோயில்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடை செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரினார்.
மேலும், புகையிலைப் பொருள்களைத் தவிர வேறெந்த பொருளையும் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்ய வழிகாட்டுதல்களைக் கோரினார்.
ஜனவரி 15 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரம் தடை மற்றும் வர்த்தகம் மற்றும் வணிக ஒழுங்குமுறை சட்டம்) மீறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியது.
இந்த மனுவை பொது நல வழக்காக ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என்று நாங்கள் கருதவில்லை என்று அமர்வு கூறியது.
இந்த நிலையில், இந்த பொது நல வழக்கை தில்லி உயர் நீதிமன்றம் விசாரிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.