சென்னையில் கிரிக்கெட் போட்டி: ஜன.25 புறநகர் ரயில் சேவை மாற்றம்!
சென்னை : சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் வரும் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இதனைக் கண்டுகளிக்க வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, அன்றைய நாளில் சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டல நிர்வாகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை கடற்கரை - வேளச்சேரி எமு ரயில்(வ. எண்: 41083) ஜன.25 இரவு 9.50 மணிக்கு பதிலாக இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி எமு ரயில்(வ. எண்: 41085) ஜன.25 இரவு 10.20 மணிக்கு பதிலாக இரவு 10.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
வேளச்சேரியிலிருந்து ஜன.25 இரவு 10 மணிக்கு புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை எமு ரயில்(வ. எண்: 41086) சேப்பாக்கம் ரயில் நிலையத்தில், இரவு 10.27 வரை 10.37 வரை 10 நிமிடங்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.