செய்திகள் :

பழநியில் அன்னதானம் வழங்குவோருக்கு புதிய கட்டுப்பாடு!

post image

பழநியில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அனுமதியின்றி உணவு வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

முருகனின் அறுபடை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்தக் கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தத் தலத்தின் மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். போகர் இந்தத் தலத்தின் மூலவரைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.

பிப்.11ல் தை பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் சுவாமி தண்டாயுதபாணிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்படுகிறது.

மேலும் பக்தர்கள் பலர் பாத யாத்திரையாகப் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளைச் சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை முருகப்பெருமானுக்கு செலுத்துவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது.

பாத யாத்திரைக்குச் செல்வோருக்கு அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் தக்க அனுமதியைப் பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முறையான அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

சொன்னீர்களே.. செய்தீர்களா? பட்டியலிடும் முதல்வர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார். அதிமுக சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினீர்களா என்று சிவகங்கையில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.சி... மேலும் பார்க்க

தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்!

தமிழகத்தில் அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 22-01-2025: தென்... மேலும் பார்க்க

சிவகங்கைக்கு மூன்று திட்டங்கள்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

சிவகங்கை: சிவகங்கைக்கு அடுத்தடுத்து இன்னும் அதிகமாக செய்து தர இருக்கிறோம். அதற்கு அடையாளமாக இந்த விழாவில் மூன்று அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சிவகங்கை மாவட... மேலும் பார்க்க

கதிர் ஆனந்திடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் விசாரணை

சென்னை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை முன்னிட்டு நேரில் ஆஜரான திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்திடம் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.இன்று காலை முதல் தற்போது வரை அ... மேலும் பார்க்க

பரந்தூருக்குப் பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம்! - அன்புமணி ராமதாஸ்

சென்னைக்கான புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:... மேலும் பார்க்க

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறாா் முதல்வா்

சென்னை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.23) அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்... மேலும் பார்க்க